அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சிகிச்சைகள் இருந்த 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று மாலை வெப்பசலனம் காரணமாக இடி மின்னலுடன் மதுரையை சுற்றி உள்ள பல பிகுதிகளில் கன மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார வயிர்கள் மற்றும் மின் கம்பங்கள் கீழே விழுந்து உள்ளன. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை முழுவதும் மின்சாரம் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்துள்ளனர்.

அதன்பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நபர்கள், ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்காத்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது

அதன் பின் அடுத்தடுத்து மூன்று நபர்களும் உயிரிழந்து உள்ளனர். அதில் மல்லிகா, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன், பழனியம்மாள் மூவரும் அடங்குவர். இந்த மூவரும் ஏற்கனவே கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு விவரம் தெரிவிக்கவே உறவினர்களை சமாதானப்படுத்தி விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.