தங்களின் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் சங்கரண்ணா-மேகனா ஆகியோரின் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் 45 வயதானவரை திருமணம் செய்து கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான மேகனா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே மேகனாவின் கணவர் வீட்டை விட்டு ஓடி விட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்கிற தகவல் தெரியவில்லை.

இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த மேகனா 2வதாகசிக்கதனேகுப்பே கிராமத்தை சேர்ந்த 45 வயதான சங்கரண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்படி, இரு வீட்டரின் அனுமதியுடன் மேகனா மற்றும் சங்கரண்ணாவிற்கு நேற்று (19-10-2021) சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது.

தங்களின் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் சங்கரண்ணா-மேகனா ஆகியோரின் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த சிலர் வயதானவரை திருமணம் செய்ததாக மேகனாவுக்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார்கள்.