கொரோனாவில் இருந்து எஸ்கேப்  ஆக சூப்பரான 3 டிப்ஸ் இதோ..!

அதிவேகமாக பரவி வரும் கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள நம் உடலில் நோய்  எதிர்ப்பு தன்மையை அதிகரிப்பதே மிக முக்கியமான ஒன்று.

அதற்கு  நாம் செய்ய வேண்டியது என்ன..? எந்த மாதிரியான உணவு பொருட்களையும் பழங்களையும் உண்ணுதல் வேண்டும் என்பதை பார்க்கலாம்.

தினமும் காலையில் இஞ்சி லெமன் சுடுதண்ணியில கொதிக்க வெச்சு தேன் கலந்து குடிச்சா எந்த வியாதியும் உள்ளுக்குள் சேராது.

இரவில் பசும்பால் மஞ்சள் தூள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் பேரிச்சம் பழ துண்டுகள் சேர்த்து தேன் கலந்து குடிக்கணும். இதனால் நோய் எதிர்ப்பு  தன்மையும் அதிகரிக்கும். உடலுக்கு வலிமையையும் சேர்க்கும் 

வெளிப்புற உடலுக்கு...

கற்பூரம் தேங்காய் எண்ணெய் சிறிது மஞ்சள் தூள் கல் உப்பு கொஞ்சம் கலந்து வெதுவெதுப்பா சூடு பண்ணி உடல் முழுவதும் தேய்த்து இரண்டு வேளையும் குளிச்சா 24 மணிநேரம் நம் உடலை எந்த கிருமியும் அண்டாது.

இது தவிர்த்து பழ வகைகள் கொய்யாப்பழம், பப்பாளி பழம், மாதுளை, கருப்பு திராக்ஷை உள்ளிட்ட பழ வகைகளையும், கம்பு, கேழ்வரகு, தினை, கவுனி அரிசி,சாமை அரிசி உள்ளிட்டவற்றால் உணவு தயாரித்து உண்டு வந்தால் போதுமானது. நம் உடலுக்கு தேவாயான நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும்.