மக்களே உஷார்..! 28 பேருக்கு கொரோனா உறுதி..! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..! 

இந்தியாவில் தற்போது வரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.,

பாதிக்கப்பட்ட 28 பேரையும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 இத்தாலிய சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு நோய் உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த மூவர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பி உள்ள இந்த ஒரு தருணத்தில் இப்படி மீண்டும் பரவி உள்ளது என குறிப்பிட்டுள்ளார் அமைச்சர்.

இந்தியா வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் சோதனை நடத்த தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே பலகட்ட சோதனைகளுக்குப் பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய நிலையில் இருவருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 28 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவே ஒருவிதமான பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த ஒரு நிலையில் நொய்டாவில் இரு பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர மென் பொறியியல் துறையிலும் வேலை செய்பவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு ஏதுவாக சில திட்டத்தை கொண்டு வரலாமா என மும்முரமாக யோசித்து வருகிறதாம் பல நிறுவனங்கள். இந்த ஒரு நிலையில் நாட்டு மக்கள் அவரவர் ஒரு சில விஷயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடந்து கொள்வது நல்லது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.