சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸின் கோர தாண்டவம் இப்போது 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. உலக அளவில் கொரோனாவால் 31 லட்சத்து 38 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது. அதில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 010 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆட்கொல்லி வைரஸிடம் இருந்து இதுவரை 9 லட்சத்து 56 ஆயிரத்து 057 பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். 

கொரோனா வைரஸ்  தொற்றை கட்டுபடுத்த தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக இடைவெளியை கடைபிடித்தல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அதனால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கூட மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு கடுமையான பொருளாதார வீழ்ச்சி, பெட்ரோல் விற்பனை சரிவு, வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடல், பொது போக்குவரத்திற்கு தடை, அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற கடைகளை திறக்க தடை என ஏகப்பட்ட கெடுபிடிகளால் பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இந்த பெரும் சரிவில் இருந்து மீண்டு வருவதற்காக சிறியது முதல் பெரியது வரை பல்வேறு நிறுவனங்கள் வொர்க் ஃபிரம் ஹோம் திட்டத்தை கையில் எடுத்துள்ளன.

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

இந்நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் கிட்டதட்ட 4.48 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 3.55 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக டி.சி.எஸ். தலைமை இயக்க அதிகாரி என்.ஜி.சுப்பிரமணியம் 25/25 மாடல் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அந்த திட்டத்தின் படி 2025ம் ஆண்டு முதல் டிசிஎஸ் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். 25 சதவீத பணியாளர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

தற்போது ஊரடங்கு காலத்திலும் டிசிஎஸ் நிறுவனம் 90 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய வைத்துள்ளது. இதற்கு முன்னதாக டிசிஎஸ் நிறுவனத்தில் 25 சதவீத ஊழியர்கள் வொர்க் ஃபிரம் ஹோம் முறையில் பணியாற்றி வந்தனர். தற்போது 2025ம் ஆண்டு முதல் அதனை 75 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அலுவலகத்திற்கான தேவை மற்றும் செலவு பெருமளவில் குறைக்கப்படுவதோடு, ஊழியர்களும் வீட்டிலிருந்தே நிம்மதியாக பணியாற்ற முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்களின் ஜாம்பவானான டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவை மற்ற நிறுவனங்கள் பின்பற்றுமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.