12 ராசியினரில் யாருக்கு "டர்னிங் பாய்ண்ட்" தெரியுமா..?

மேஷ ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். தொலைபேசி வாயிலாக ஓர் நல்ல செய்தி வரும்.

ரிஷப ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை

கடக ராசி நேயர்களே..!

உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்களை விட்டு விலகி செல்வீர்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். இன்று சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டி வரும்

சிம்மராசி நேயர்களே..!

இடமாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கி நிற்கும். உங்களுக்கு திடீரென மேற்கொள்ளும் பயணத்தால் நல்ல செய்தி வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அயல்நாட்டில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருள் வாங்க திட்டமிடுவீர்கள். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். உல்லாச பயணிகளின் உள்ளத்தை செலுத்துவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே..!

உங்கள் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றி விடுவீர்கள்.பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டை சீரமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

வழிபாட்டால் வளர்ச்சி அதிகரிக்கும். எதையும் யோசித்து செய்வது நல்லது. சில தொல்லைகள் அவ்வப்போது வந்து போகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களைப்பற்றி குறை கூறினாலும் அதைப்பற்றி துவண்டு விடாதீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

பெரியவர்களின் சந்திப்பு கிடைக்கும். திருமண முயற்சி கைக்கூடும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். சமூக சேவையில் உங்களது நாட்டம் அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எப்படி நடக்கும் என்று நினைத்த ஒரு காரியம் மிக எளிதாக நடந்து முடியும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கும்பராசி நேயர்களே...!

புகழ்மிக்க வகை சந்திப்பு அதிகரிக்கும். பொது வாழ்வில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரலாம். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். பண வரவு இருமடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மீனராசி நேயர்களே...!

கோரிக்கைகளை நிறைவேற்ற கோவிலுக்கு சென்று வருவீர்கள். செலவும் ஒரு பக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் மும்மூரமாக  செயல்படுவீர்கள் .