12 ராசியினரில் ஆபரணம் வாங்கக்கூடிய ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

தவறு செய்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்து விடுவீர்கள். வருங்கால நலன் கருதி சில முக்கிய முடிவை எடுப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

நீங்கள் நினைத்தது நிறைவேறும். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். வாகனங்களை சரி செய்ய வேண்டி வரலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

குடும்பத்தினரின் தேவைகளை அவ்வப்போது பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முயற்சி மேற்கொள்வீர்கள். பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

கடக ராசி நேயர்களே...!

தொழிலில் இருந்துவந்த போட்டிகள் மெல்ல மெல்ல அகலும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி கொடுக்கும். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். அவர்களுக்காக எடுத்த முயற்சி வீண் போகாது. வேலையாட்களிடம் போராடி வேலையை வாங்க கூடிய நிலை ஏற்படும். விரையம் அதிகரிக்கலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

உறவினர் பகை உருவாக வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். ஆனால் கவலைப்படாதீர்கள். விருந்தினர் வருகையால் வீடு மகிழ்ச்சியாக காணப்படும்.

துலாம் ராசி நேயர்களே....!

ஆடை ஆபரண சேர்க்கை எப்போதுமே உங்களுக்கு உண்டு. வேலை பளு அதிகரிக்கும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

நல்ல விஷயம் உங்கள் இல்லத்தில் நடைபெறும். வருங்கால நலன் கருதி ஒரு முக்கிய முடிவு எடுப்பீர்கள். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். 

தனுசு ராசி நேயர்களே....!

தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஓர் கடிதம் மூலம் நல்ல செய்தி வரும். செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

சொன்ன சொல்லை காப்பாற்ற முற்படுவீர்கள்.அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

முன்னேற்றம் காண முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறி உங்களிடம் பேச முயற்சி செய்வார்கள். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

மீனராசி நேயர்களே...!

நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். வரவும் செலவும் சரியாக இருக்கும். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். வருங்கால நலன் கருதி சில முக்கிய முடிவு எடுப்பீர்கள்.