12 ராசியினரில் வெளியூர் பயணம் மூலம்  லாபம் பெறுவது யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு ஆதாயம் தரும் நாளாக அமையும். உங்களது திறமை வெளிப்படும் திடீரென பணவரவு இருக்கும். மருத்துவ செலவுகள் குறைந்து விடும். தொழிலில் அடுத்தகட்ட முயற்சியை எடுத்து வைப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

பொறுமையோடு செயல்பட்டு பல காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். உங்களது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து பல நல்ல திட்டங்களை செய்து காட்டுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

வாய்ப்புகள் வந்து சேரும். நண்பர்களால் நல்ல விஷயம் நடக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்களுடைய செயல்பாடு அனைவராலும் பாராட்டப்படும்.

கடக ராசி நேயர்களே..!

நாளுக்கு நாள் உங்களுடைய பொருளாதாரம் உயரும். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். சகோதரரே உங்களுக்கு உதவி செய்வார்.

சிம்ம ராசி நேயர்களே...!

வெற்றி செய்தி உங்கள் வீடு தேடி வரும். ஆடம்பரப் பொருட்களை வாங்க வாய்ப்பு உங்களுக்கு உண்டு.தொலைதூரப் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

கன்னி ராசி நேயர்களே...!

கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். எந்த ஒரு காரியமும் நல்லதாக நடக்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

பக்குவமாக பேசி பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு. உத்தியோக நலன் கருதி ஊர் மாற்றம் செய்யும் எண்ணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

விருச்சக ராசி நேயர்களே...!

கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் மும்முரமாக இருப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். தொலைபேசி வழித் தகவல் நல்ல செய்தி வரும். தொழில் முன்னேற்றம் கருதி வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

தனுசு ராசி நேயர்களே...!

மாலைநேரத்தில் கலகலப்பாக காணப்படுவீர்கள். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சேமிப்பை ஈடுகட்ட வேறு ஒரு வேலையை செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியுமா என உங்கள் மீது உங்களுக்கே சில சமயத்தில் சந்தேகம் வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

சற்று செலவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாக பேசாதீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். தொலைபேசி வழியில் சில நல்ல செய்தி வரும்.

கும்ப ராசி நேயர்களே..!

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கிய புள்ளியின் உதவி உங்களுக்கு கிடைக்கும். சொத்து பிரச்சனை சுமுகமாக முடியும். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள்.