12 ராசியினரில் யாருக்கு இன்று "குட் நியூஸ்" வரும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும். மற்றவர்களிடம் பக்குவமாக பேசி சில காரியங்களை எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொலைதூர செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நண்பர்கள் ஓடோடி வந்து உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

அரசு வழியில் எதிர் பார்த்து காத்திருந்த சில சலுகை உங்களுக்கு இன்று கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீடு மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். நல்ல சம்பவம் நடைபெறும் யோகம் இன்று உண்டு. 

கடக ராசி நேயர்களே..!

பாதியில் நின்ற பணி தொடர்ந்து நடைபெறும். தன்னம்பிக்கையோடு அடுத்த முயற்சியை மேற்கொள்வீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் தொழில் முன்னேற்றம் அடையும். வங்கிகளில் உங்களது சேமிப்பு உயர வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி நேயர்களே..!

உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும். தொலைதூரத்திலிருந்து ஓர் நல்ல செய்தி வரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். யாரிடமிருந்தும் எந்த தொல்லையும் அனுபவிக்காமல் இன்று நிம்மதியாக இருக்கலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வரும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

பணம் பல வழிகளில் வந்து பையை அடையும். ஆற்றல் மிக்கவர்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. உடன்பிறப்புகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். மாலை நேரத்தில் சிந்திப்பீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

உங்கள் குணமறிந்து மற்றவர்கள் நடந்து கொள்வார்கள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவுக்கு வரும். கொடுக்கல் வாங்கல் சீராக நடக்கும். 

தனுசு ராசி நேயர்களே..!

வரவு-செலவு சமமாக இருக்கும். வளர்ச்சி திட்டங்களை குறித்து முயற்சி செய்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என சிந்திப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

வருங்கால நலன் கருதி புதிய திட்டத்தை முயற்சி செய்வீர்கள்.எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க சிந்திப்பீர்கள். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டாகும்

கும்ப ராசி நேயர்களே...!

சுப செலவுகள் வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குடும்பச் சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மீனராசி நேயர்களே..!

தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்து வந்தவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.