12 ராசியினரில் பிரபலங்களின் நட்பு  கிடைக்கபெறுபவர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். பழைய பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களது நடவடிக்கையில் புத்திசாலித்தனம் தெரியவரும். பணப்புழக்கம் அதிகரிக்க கூடிய நாள். பிரபலங்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வீட்டில் அமைதி நிலவும்.

மிதுன ராசி நேயர்களே...! 

பழைய நண்பர்கள் மூலமாக உங்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அதற்கேற்றவாறு நடந்து கொள்வார்கள். உங்களுக்கு பிடித்த கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

பிரபலங்களின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படும். வீடு வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். 

சிம்ம ராசி நேயர்களே....!

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வருங்காலம் குறித்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய நண்பர் ஒருவரைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

தாமதங்கள் நீங்கும்.இன்று சில காரியங்களை எப்படியாவது முடித்து விட வேண்டும் என நினைப்பீர்கள். பூர்வீகச் சொத்தை விற்க நேரிடலாம். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அடிக்கடி வந்துபோகும். பிள்ளைகளின் நடவடிக்கையை கவனிப்பது நல்லது.

துலாம் ராசி நேயர்களே..!

இன்று சுறுசுறுப்புடன் செயல்பட்டு சில காரியங்களை முடித்து விடுவீர்கள். இன்றைய நாள்  முழுவதும் சற்று படப்படப்புடன் காணப்படுவீர்கள். 

விருச்சிக ராசி நேயர்களே...!

அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் விவாதங்களில் ஈடுபடாமல் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். திடீர் பணவரவு உண்டு 

தனுசு ராசி நேயர்களே....!

எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். -எதிர்பாராத பணவரவு உண்டு. விருந்தினர் வருகை உண்டு

மகர ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ தொடங்கும். பண வரவு திருப்தியாக இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். இன்றைய நாள் முழுக்க சந்தோஷமாக  காணப்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றி அடையும்.

மீன ராசி நேயர்களே..! 

ஒருவிதமான பயம் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மாலை முதல் டென்ஷன் சற்று குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.