12 ராசியினரில் யாருக்கு "விலை உயர்ந்த பொருட்களை" வாங்கக்கூடிய யோகம் உண்டு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

வேலை தேடும் முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிய பேச்சு ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து ஆதரவு தருவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

கல்யாண வாய்ப்பு வரும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வீடு தேடி வரும். நண்பர்கள் ஓடோடி வந்து உதவி செய்யக் கூடிய சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுன ராசி நேயர்களே...!

புதிய நண்பர்கள் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

கடக ராசி நேயர்களே...!

உங்களது நட்பு வட்டம் நாளுக்கு நாள் விரிவடையும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய வாய்ப்பு கிடைக்கும்.  நீண்ட நாளாக இருந்த ஒரு பிரச்சனை சுமூகமாக முடியும்.

சிம்ம ராசி நேயர்களே...!

பண வரவு திருப்தியாக இருக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆற்றல்மிக்க மக்களின் ஒத்துழைப்பால் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

தெய்வீக சிந்தனை மேலோங்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய  வரலாம். ஆன்மீக  சிந்தனை அதிகரிக்கும். 

துலாம் ராசி நேயர்களே..!

சர்ச்சைகள் மெல்ல மெல்ல குறையும். இல்லத்தில் மங்கள ஓசை கேட்க கூடிய வாய்ப்பு ஏற்படும். உங்களில் திறமையான செயல்பாடுகளை பார்த்து மற்றவர்கள் வியப்பாக பார்ப்பார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும். வருமானம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். வளர்ச்சிக்கு உறவினர்களும் நண்பர்களும் உதவி செய்வார்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

தனுசு ராசி நேயர்களே...!

விருப்பங்கள் நிறைவேற வழிபாடுகளில் நம்பிக்கை வைக்கும் நாள். பணப்பற்றாக்குறை அகலும் உடல் நலம் சீராகும்.

மகர ராசி நேயர்களே...!

உங்களது மகிழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

விருப்பங்கள் நிறைவேற கூடிய நாள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். வேலையாட்களால் பிரச்னைகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணத்தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம்.

மீனராசி நேயர்களே...!

கைமாத்தாக கொடுத்த தொகையை திரும்ப உங்களுக்கு கிடைக்கும். நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.