12 ராசியினரில் "புதிய சொத்து" வாங்கும் யோகம் யாருக்கு உண்டு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

வழிபாட்டில் அதிக ஆர்வம் உங்களுக்கு ஏற்படும். வரவு திருப்தியாக இருக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

நாளுக்கு நாள் முன்னேற்றம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.மிக முக்கிய ஒரு விஐபி உதவி செய்வார்கள். போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய நாள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். வரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.

கடகராசி நேயர்களே...!

பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மராசி நேயர்களே..!

மிகவும் கவனமாக இருக்கவேண்டிய நாளாக அமையும். வெளிவட்டார பழக்க வழக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வீடு மாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கூடுதலாக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

கன்னி ராசி நேயர்களே...!

கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்கள் மனதில் ஒருவிதமான சந்தோஷம் குடிகொள்ளும். விலை உயர்ந்த பொருள் வாங்க முன்வருவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

தனவரவு தாராளமாக அதிகரிக்கும் நாள்.  நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். தொழில் வளர்ச்சி குறித்த காரியம் நிறைவேறும். இடம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள்.

கொரோனா எதிரொலி...! மத்திய அரசு முக்கிய தகவல் ..!

விருச்சிக ராசி நேயர்களே..!

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள திட்டமிடுவீர்கள். தொலைபேசி வழித் தகவல் உங்களது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பயணத்தால் பலன் அதிகரிக்கும் 

தனுசு ராசி நேயர்களே...!

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள் இது. எப்படியும் முடிந்துவிடும் என நம்பியிருந்த ஒருவேலை தள்ளிப் போகலாம். பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது.

மகர ராசி நேயர்களே...!

தொட்டது துலங்கும் நாள். திருமண முயற்சி கைகூடும். நேர்மை நாணயம் கொண்ட நண்பர்கள் உங்களுக்கு நம்பிக்கையாக இருப்பார்கள். வெளி உலக தொடர்பு அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கைமாத்தாக மற்றவர்களுக்கு கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளலாம். உத்தியோக மாற்றங்கள் குறித்த சிந்தனை மேலோங்கும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட மனக் கசப்பு குறையும்.

மீனராசி நேயர்களே...!

பொதுவாழ்வில் உங்களது புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறை உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்து வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.