கொரோனா எதிரொலி...! மத்திய அரசு முக்கிய தகவல் ..! 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு அதிரடியாக அறிவுறுத்தியுள்ளது.

மக்களுக்கு பரவாமல் இருப்பதற்காக மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. எனவே மக்கள் பொது இடங்களில் அதிகம் கூட வேண்டாம் என்றும் கூட்டத்தில் நடக்கும் போதும் யாரையும் தொடாமல் அவரவர் கைகளில் கைக்குட்டை வைத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும் எனவும், அடிக்கடி கைகளை கழுவிக் கொண்டு சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும், கைகளை வைத்து முகத்தில் அடிக்கடி தொடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மற்றவர்களிடம் கைகுலுக்கி பேசுவதைவிட, வணக்கம் சொல்லுவது மிக முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை டெல்லியில் கொரோனோவால் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மக்களுக்கு பரவாமல் இருப்பதற்காக மத்திய அரசு மிக முக்கிய ஆலோசனை மேற்கொண்டு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அதே வேளையில் மக்களும் இதற்கு தகுந்தாற்போல் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் எவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்த விஷயங்களை தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும், மிக சிறப்பாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையின் நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்து இருந்தனர் என்பது கூடுதல் தகவல்.