12 ராசியினரில் புதிய வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு உண்டு தெரியுமா ..?

மேஷ ராசி நேயர்களே..!

இன்று நீங்கள் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..!

அலைச்சல் டென்ஷன் ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்புகள் சற்று குறையத் தொடங்கும். சிலரின் நட்பை முன்கோபத்தால் இழக்க நேரிடலாம். மாலை முதல் சாதகமான நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்துபோகும். சகோதரர்களால் டென்ஷன் அவ்வப்போது வரும். உங்களிடம் சிரித்துப் பேசிக் கொண்டே பலரும் துரோகம் செய்ய பார்ப்பார்கள்.  

கடக ராசி நேயர்களே...!

மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பீர்கள். முகம் பொலிவுடன் காணப்படும். பாதியில் நின்ற வேலையை  விரைவில் செய்து முடிப்பீர்கள். 

சிம்மராசி நேயர்களே...!

சுறுசுறுப்புடன் வேலைகளை செய்து காட்டுவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வாகனம் புதியதாக வாங்குவீர்கள். பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து பேசுவதால்  உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே...!

எதிலும் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். பண வரவு திருப்தியாக இருக்கும். உறவினர் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்த வாய்ப்பு கிடைக்கும். பணத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

பிள்ளைகளுக்கு கொஞ்சம் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கிய குறைபாடு அவ்வப்போது வந்து செல்லும். திடீர் பயணங்களால் செலவு அதிகரிக்க செய்யும். மகிழ்ச்சியான செய்தி உங்களை வந்தடையும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுத்து வெற்றி பெறுவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

தனுசு ராசி நேயர்களே...!

நினைத்த காரியங்கள் எல்லாம் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் உங்கள் கைக்கு வரும்.கல்யாண பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வாய்ப்பு உண்டு. ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களது பழுதான வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க முற்படுவீர்கள். வீடு வாங்குவது விற்பது என எதிர்பார்த்த காரியங்கள் விரைவாக நடக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

குடும்பத்தினரின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க முற்படுவீர்கள். இழுபறியாக இருந்த சில காரியங்கள் முடிவுக்கு வரும்.

மீனராசி நேயர்களே...!

நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.