12 ராசியினரில் யாருக்கு கடன் பிரச்சனை சமாளிக்க கூடிய அதீத திறமை இருக்கும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

உங்களை தேடி நல்ல வாய்ப்புகள் வரும். தொழில் முன்னேற்றத்திற்கு உங்களது நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சில பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வரும்.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களின் பொருளாதாரம் உயரும். பக்கபலமாக இருப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து பொதுவாழ்வில் ஈடுபடுவதால் புகழ் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சி நடக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

பயணத்தால் பலன் கிடைக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறருக்கு வேலை சொல்வதை தவிர்க்கவும்.

கடக ராசி நேயர்களே...!

இடமாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். மற்ற தொழில் முனைவோர்களிடம்  கவனமாக நடந்துகொள்வது நல்லது.

சிம்ம ராசி நேயர்களே..!

நீங்கள் எதிர்பார்த்தபடி தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். எதிர்கால திட்டம் ஒன்றை வகுப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

எடுத்த காரியத்தை விரைவாக முடிக்க கூடிய நாள். வருமானத்திற்கு வழி வகை செய்து கொள்வீர்கள். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். நல்லவர்கள் எப்போதும் உங்களுக்கு துணை நிற்பார்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். 

விருச்சிக ராசி நேயர்களே...!

தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள்.பல நாள் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். நாளுக்குநாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் செலவு அதிகரிக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

உத்தியோகத்தில் புதிய முயற்சியை எடுப்பீர்கள். உடனிருப்பவர்கள் உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியே இருந்துவந்த பிரச்சினை அகலும். தொழிலில் புதிய நண்பர்கள் வந்து இணைவார்கள்.

மகர ராசி நேயர்களே...!

ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். அருகில் வசிப்பவர்கள்களிடம் பகையாக இருக்கவேண்டாம். கடன் பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய பேச்சுத் திறமை உங்களிடம் வெளிப்படும்.

கும்ப ராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு மிகவும் யோகமான நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடிய நபர் நீங்கள். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி புதிய முயற்சி எடுப்பீர்கள். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும்.

மீனராசி நேயர்களே...!

உங்களது நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உதவும். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்களுக்கு உதவு செய்ய முன்வருவார்கள்.