12 ராசியினரில்  யாருக்கு சில முக்கிய வி.ஐ.பி சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

பயணத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய நாள். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உங்களது நண்பர்கள் உதவுவார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியம் ஒன்று நல்லபடி முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் நாளுக்குநாள் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சி குறித்த பேச்சுவார்த்தை நடக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

அடுத்தவருக்கு உதவி செய்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள். இதுநாள் வரை சேர்த்து வைத்த தொகையில் சிறிது பணம் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளும் ஒரு விஷயத்திற்கு தாமதம் ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கலாம்.

கடகராசி நேயர்களே...!

வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இல்லம் தேடி சில முக்கிய புள்ளிகள் வருவார்கள். தொலைபேசி வழித் தகவல் தொலை தூர பயணத்தில் உறுதுணையாக அமையும். அரசியல் செல்வாக்கு மென்மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

சிம்மராசி நேயர்களே...!

யோசித்து செயல்பட வேண்டிய நாள். தடைகளும் தாமதங்களும் சற்று அதிகரிக்கலாம். முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

கன்னி ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு யோகமான நாள். புதிய தொழில் தொடங்க திட்டம் தீட்டுவீர்கள். விரும்பிய காரியம் ஒன்று நடைபெறும். இல்லத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வமாக இருப்பீர்கள்

துலாம் ராசி நேயர்களே...!

காலை நேரத்திலேயே நல்ல செய்தி தேடிவரும். முன்னேற்ற பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பூர்விக சொத்து தகராறு முடியும். சான்றோர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். வி ஐ பி களின் சந்திப்பால் உங்கள் விருப்பத்தை தெரிவிப்பீர்கள்.தொழில் வளர்ச்சி மேலோங்கி காணப்படும். தொல்லை தந்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.

தென்னிந்திய பெண்ணை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர் கிளைன் மேக்ஸ்வெல்..!

மகர ராசி நேயர்களே..!

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். வீடு மனை வாங்க வாய்ப்பு வரும். தொழில் மாற்றம் குறித்து முயற்சி செய்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். நீங்கள் செய்யும் செயலில் வெற்றி அடைவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனராசி நேயர்களே...!

மதிப்பும் மரியாதையும் உயரும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும்