தென்னிந்திய பெண்ணை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர் கிளைன் மேக்ஸ்வெல்..! 

தென்னிந்தியாவை சேர்ந்த வினிராமன் என்ற பெண்ணை மணக்க இருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிளைன் மேக்ஸ்வெல் இதுகுறித்த அறிவிப்பை அவர் தனது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிளைன் மேக்ஸ்வெல், சவுத்இந்தியாவை சேர்ந்த வினிஇராமன் என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வருவதை புகைப்படங்களாக பார்க்க முடிந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிளைன் மேக்ஸ்வெல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரை மன அழுத்தத்திலிருந்து போக்கி மீண்டும் நார்மல் நிலைக்கு கொண்டு வந்தார். அதன் பின்னர் இருவரும் மீண்டும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு அன்பு பரிமாறிக் கொண்டனர்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! சவரன் ரூ.32,656!

இந்தநிலையில் மேக்ஸ்வெல் வினி ராமனிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டுள்ளார். அதற்கு வினி ராமனும் ஓகே சொல்ல இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 31 வயதான கிளைன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.வினி ராமனுக்கு 27 வயதாகிறது .இவர் தென் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட... பிறந்தது படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஃபார்மசி படித்துவிட்டு அங்கு ஃபார்மசிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறா.ர் இவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார். அவர் செவிலியராக பணிபுரிகிறார்.