அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.8 உயர்ந்து 4082.00 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 8 உயர்ந்து 32 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

சவரன் விலை ஏற்கனவே 33 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் அடைந்து  இருந்தது. இந்த நிலையில் சற்று குறைந்து 32 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையாகி வருகிறது 

வெள்ளி கிராமுக்கு 30 பைசா அதிகரித்து 51.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

12 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை..! 12 வயது சிறுவனை காப்பாற்றிய Gleneagles குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை..!

இனி வரும் காலங்களில் அதிக சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாத சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து பெருகி வரும் தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் மன வருத்தம் அடைந்து உள்ளனர்.

இது தவிர, உலக பொருளாதாரத்தில் நிலவவும் மந்தமான நிலைமை காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் சவரன் விலை உயர்ந்து 35 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளது என ஏற்கனவே பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.