12 ராசியினரில் வீடு மனை வாங்க யாருக்கு வாய்ப்பு அதிகம்..? 

மேஷ ராசி நேயர்களே...!

பணியில் சில நாட்கள் தொய்வு ஏற்பட்டு இன்று முதல் விலகத் தொடங்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வரும் காலங்களில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இடம் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஊக்கத் தொகை பெற வாய்ப்பு உள்ளது. 
வீட்டை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

நிதிநிலை மெல்லமெல்ல உயரும். இளைய சகோதரர் உங்களுக்கு உதவி செய்வார். இன்று மாலை நேரத்தில் உங்களுக்கு மனதுக்கு பிடித்த செய்தி வந்தடையும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். 

கடக ராசி நேயர்களே...!

அதிகாலையில் நல்ல தகவல் வந்து சேரும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். உறவினர்கள் வழியில் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். 

சிம்மராசி நேயர்களே...!

சலுகைகள் கிடைத்து சந்தோஷம் அடைவீர்கள். எடுத்த காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வரவு திருப்தியாக இருக்கும். இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

துலாம் ராசி நேயர்களே...!

தனவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். இருப்பினும் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணையாக அமையும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே....!

நாட்டுப்பற்று மிக்கவர்களால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வங்கி சேமிப்பு நாளுக்கு நாள் உயரும். பொது வாழ்க்கையில் உங்களுக்கு புகழ் அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு ராசி நேயர்களே...!

பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து உங்களிடம் பேசுவார்கள்.

மகர ராசி நேயர்களே...!

யாரையும் உதாசீனப்படுத்தாதீர்கள். நினைத்தவற்றை உடனடியாக செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் கொள்ளாதீர்கள். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் உங்களுக்கு உண்டு.

கும்பராசி நேயர்களே...!

முன்கோபத்தால் சில முட்டுக்கட்டை வரும். வியாபார விரோதங்கள் உருவாகலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும். பயணங்களை சற்று மாற்றி அமைத்து, அதற்கு ஏற்றவாறு பயணம் செய்வது நல்லது.

மீனராசி நேயர்களே...!

களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபட வேண்டிய நாள். கனிவாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்