12 ராசியினரில் விலகி சென்றவர்கள் மீண்டும் வந்து பேசும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் தெரியுமா..?   

மேஷ ராசி நேயர்களே...!

எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். இளைஞர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த ஒருவேளை இன்று முடியும். தொழில் வளர்ச்சி நாளுக்கு நாள் உயரும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே...!

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் கூடிய யோகம் உங்களுக்கு பிறக்கும். வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு வரலாம்.

மிதுன ராசி நேயர்களே..!

திட்டமிட்ட காரியம் ஒன்று நடைபெறும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிக்கு உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் யோகம் உங்களுக்கு உண்டு.

கடக ராசி நேயர்களே....!

வழிபாட்டால் வளர்ச்சி ஏற்படக்கூடிய நாள். தொழில் ரீதியாக சில மறைமுகப் போட்டி ஏற்படலாம். திடீர் செலவுகள் ஏற்படும். எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெறும் முயற்சி மேற்கொள்ள வேண்டி வரலாம்.

சிம்ம ராசி நேயர்களே...!

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் உங்களுக்கு கிடைக்கும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வாழ்க்கைத்துணை வழியில் உங்களுக்கு நன்மை நடக்கும். ஒரு முக்கிய முடிவிற்கு தகுந்த ஆலோசனை பெற்று முடிவெடுப்பீர்கள். கல்யாண கனவு நனவாக கூடிய வாய்ப்பு வரப்போகிறது.

துலாம் ராசி நேயர்களே...!

எதிரிகள் மறைந்து செலவார்கள். கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோக மாற்றம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய யுக்திகளை கையாள முயற்சி மேற்கொள்வீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே..!

நன்மைகள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். வருமானத்தில் எதிர்பார்த்ததை காட்டிலும் இரு மடங்கு லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

இனிய செய்தி இல்லம் தேடி வந்து உங்களை மகிழ்ச்சி கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்கக்கூடிய நேரம் வரும். பெற்றோர் வழியில் பிரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பணம் வந்து சேரும்.

மகர ராசி நேயர்களே...!

தடைகள் வந்து அகலும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தக்க சமயத்தில் உறவினர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய ஒரு வாய்ப்பு உங்களை தேடி வரும். பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும்.

கும்பராசி நேயர்களே...!

எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பூமி வாங்கும் யோகம் உங்களுக்கு உண்டு.

மீனராசி நேயர்களே...!

பயணத்தால் அதிக பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசி சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு வழி ஒத்துழைப்பு கிடைக்கும். உணவு கட்டுப்பாடு சரியாக இருந்தால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.