இந்த 10 அறிகுறி இருந்தால்... நீங்கள் தான் அவளுக்கு "ஹீரோ"..! வேற லெவல் பீலிங்ஸ் பாய்ஸ்..! 

ஒரு பெண் தம்மை காதலிக்கிறாளா என்பதை தெரிந்துகொள்ள இந்த 10 அறிகுறி இருக்கான்னு  தெரிஞ்சிக்கோங்க ...

உங்களை விட அவர்களுக்கு வேறு எதுவும் முக்கியமாக தெரியாது

உங்களுடைய சமூக வலைத்தளத்தில் உள்ள பதிவுகளில் லைக்ஸ் போடுவது, எந்த பதிவாக இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்குள் ரிப்ளை கொடுப்பது இதுபோன்ற ஆக்டிவிட்டீஸ் பெண்களிடம் கண்டிப்பாக இருக்கும்.

பெண்களைப் பொறுத்தவரையில் தனக்கு பிடித்த நபரை சந்திக்க செல்லும்போது தன் பெண் தோழிகளுடன் செல்ல ஆசைப்படுவார். ஆனால் ஐந்து நிமிடத்திற்கு மேல் தமக்கு பிடித்த ஆண் நண்பரிடம் பேச விடமாட்டார்.

ஒரு பெண் எப்போதுமே ஒரு படி மேலே சென்று உங்களிடம் நெருக்கமாக இருக்க முற்படுவார். நெருக்கம் என்றால் தாம்பத்திய உறவு என நினைத்துக் கொள்ள வேண்டாம். கைகளை பிடித்து நடப்பது, தொட்டு தொட்டு பேசுவது இவை அனைத்தையும் சொல்லலாம். அதாவது உரிமையை எடுத்துக்கொள்வார் 

நீங்கள் நேரம் கெட்ட நேரத்தில் போன் செய்தாலும், குடிபோதையில் இருந்தாலும் வழக்கம் போல போன் செய்யும் போது கண்டிப்பாக ஆவலாக போன் எடுத்துப் பேச கூடியவளாக இருப்பாள்.

உங்களுடைய முன்னாள் காதலி அல்லது பெண் தோழிகளைப் பற்றி தெரிந்து கொள்ள முற்படுவாள். அவர்கள் இல்லாமலேயே என் கூட நீங்கள் இருந்தால் வாழ்க்கை மேலும் சிறக்கும் என்பதை அவ்வப்போது உங்களுக்கு நினைவு கூர்ந்து கொண்டே இருப்பாள்.

உங்களின் பிறந்தநாள், உங்கள் பெற்றோரின் திருமண ஆண்டு, வேலையில் பதவி உயர்வு உள்ளிட்ட சில முக்கிய நாட்களைக் குறித்து வைத்துக் கொண்டு சரியாக வாழ்த்து தெரிவிப்பது அவர்களுடைய குறிக்கோளாக வைத்து இருப்பார்கள்.

சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் கூட, எந்த ஒரு விஷயம் உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறதோ அதில் அதிகம் ஆர்வம் காண்பிப்பார்கள்

நீங்க ஏதாவது ஒரு பிரச்சனையில் மூடு அப்செட் ஆகி இருந்தாலும் அதிலிருந்து மீளும் வரை உங்களை சிரிக்க வைக்க அவரால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பாள்.

உங்களை சந்திக்க வரும்போது 5 நிமிடத்திற்கு முன்னதாகவே வந்து உங்களுக்காக காத்திருக்க நினைப்பார்

நீங்கள் வேறு ஒரு பெண்ணை பற்றி உயர்த்திப் பேசினாலும், புகழ்ந்து பேசினாலும், அதனை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போது கண்டிப்பாக பொஸசிவ் வரும் 

நீங்கள் சொல்லக் கூடிய எல்லா வார்த்தைகளையும் சரியாக கவனித்துகேட்பார்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு மிக முக்கியமாக தெரியும். எனவே பார்த்து பேசுவது நல்லது 

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் பெண் தோழியிடம் தெரிந்தால் அவள் கண்டிப்பாக உங்கள் மீது காதல் கொண்டுள்ளார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.