1.20 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம்  அதிரடி ரத்து..! போக்குவரத்து போலீசார் அதிரடி..!  

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பங்குகளில் சாலைபாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அவர், "கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவிலேயே அதிக விபத்துக்கள் நடைபெறும் மாநிலம் தமிழகம் என்றும் மற்றும் உயிரிழப்பு அதிகமாக ஏற்படும் மாநிலமும்  தமிழகம் தான் என தெரிவித்து இருந்தார்.

2016  ஆம் ஆண்டு உயிரிழப்பவர்களின எண்ணிக்கை 17 ஆயிரமாக இருந்தது. ஆனால் அதன்பிறகு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் தற்போது 10 ஆயிரமாக குறைந்து உள்ளது. ஆனால் இது 2030க்குள் பூஜ்யம் என்ற அளவில் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என தெரிவித்துள்ளார். 

அதாவது 2016 ஆம் ஆண்டு விபத்தில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையாக 870 என்றும் ஆனால் 2019 ஆம் ஆண்டு 375 ஆகக்குறைந்தது என்றும் குறிப்பிட்டு உள்ளார். தமிழகத்தில் மூன்று கோடி பேருக்கும் அதிகமான வாகனங்கள் இருக்கின்றன. அதில் இரு சக்கர வாகனங்களின்  எண்ணிக்கை மட்டுமே இரண்டு கோடிக்கும் அதிகமாக உள்ளது.

எனவே இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்தும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வதும் மிகவும் நல்லது. மதுபோதையில் வாகனம் ஓட்டியது மட்டுமல்லாமல்... அதிக வேகமாக ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரின் வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து இருக்கின்றோம். தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் 40 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே ஆம்புலன்ஸ் சேவை விரைவாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது என  தெரிவித்து உள்ளார்.