பெண்கள் எப்போதுமே தன்னை ஸ்லிம்மாக காட்டி கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதிலும் குண்டான பெண்கள் ஸ்லிம்மாக காட்டிக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள். புடவையிலும் ஸ்லிம்மான தோற்றத்தை எப்படி பெறலாம் என்பதற்கான சூப்பர் ஐடியாக்கள் இதோ...
குண்டாக இருக்கும் பெண்கள் அனைவருக்கும் தினமும் எந்த உடையை அணிந்தால், தங்கள் உடல் எடையை குறைத்து காட்டும் என்பதை தேர்வு செய்து போடுவதே மிகப் பெரிய டாஸ்காக இருக்கும். அதிலும் அலுவலகம் செல்லும் பெண்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம். தினமும் இதற்காக நேரம் ஒதுக்குவதே சளிப்பாக உணர்வார்கள். பார்ட்டி, விசேஷம் என எங்கு செல்வதாக இருந்தாலும் மற்றவர்கள் முன்பு தங்களின் உடல் எடையை குறைத்து, ஸ்லிம் தோற்றத்தில் தெரிய வேண்டும் என ரொம்பவே மெனக்கெடுவார்கள்.
இன்னும் சில பெண்கள் குண்டாக தெரிவோம் என்பதற்காகவே புடவை அணிவதையே தவிர்ப்பார்கள். ஆனால் கோவில், திருமணம், நெருங்கிய உறவினர்கள் வீட்டு திருமணம் என்றால் புடவை தானே அணிந்து செல்ல வேண்டி உள்ளது. அந்த மாதிரி சமயங்களில் நீங்கள் புடவை அணிந்தால் கூட ஸ்லிம்மாக தெரிய வேண்டும் என நினைக்கிறீர்களா? அதற்கு இந்த டிப்ஸ்களை டிரை செய்து பாருங்கள். நிச்சயமாக பார்க்கும் பலரும், "என்ன இப்படி இளைச்சு போய்விட்டீர்கள்?" என கேட்பார்கள். அந்த சீக்ரெட் டிப்ஸ் இதோ...
ஸ்லிம்மாக தெரிய சீக்ரெட் டிப்ஸ் :
* நீங்கள் எப்போது புடவையை தேர்வு செய்வதாக இருந்தாலும், கைத்தறி புடவைகளாக தேர்வு செய்யுங்கள். காட்டன் புடவையில் குண்டாக தெரிவோம் என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காட்டன் புடவையில் தான் ஸ்லிம்மாக தெரிய முடியும்.
* குண்டான பெண்கள் எப்போதும் பட்டு புடவை, சந்தேரி புடவை, ஷிஃபான் புடவைகள், தூய பட்டுப் புடவை, செயற்கை புடவை, தாசர் பட்டுப் புடவை, கிச்சா பட்டு புடவை, கைத்தறி புடவைகள் ஆகிய ரக புடவைகளை தேர்வு செய்து அணிவது சிறப்பாக இருக்கும்.
* ப்ளவுஸ் அணியும் போது குட்டை கை வைத்த ப்ளவுஸ்களை எப்போதும் அணிவதை தவிர்த்து விடுங்கள். குட்டை கை வைத்த கை கொண்ட ப்ளவுஸ்களை அணிவதால் கைகள் பெரிதாக இருப்பது அப்பட்டமாக தெரியும். கையில் இருக்கும் வளைவுகளும் தெரியும். அதனால் த்ரீ ஃபோர்த் எனப்படும் முழங்கை வரை நீண்டிருக்கும் கை வைத்த ப்ளஸ்களை அணியலாம். ஒருவேளை நீங்கள் ஆபீஸ் பார்ட்டி அல்லது திருமண விழாக்களுக்கு செல்வதாக இருந்தால் முழுக்கை கொண்ட ப்ளஸ்களை அணிந்து செல்லலாம். இதனால் உங்கள் கைகள் மேலிருந்து கீழ் வரை ஒரே மாதிரி தட்டையாக தெரியும். இது போன்ற முழுக்கை ப்ளஸ்கள் பலரும் விரும்புவதில்லை. ஆனால் இவை தான் கிராண்ட் லுக்கை உங்களுக்கு கொடுக்கும்.
* குறைந்த அளவிலான ஃபீட்ஸ்களை வைத்து புடவை கட்டுங்கள். இது உங்களை ஸ்லிம்மாக காட்டும். அதிகமாக ஃபிலீட்ஸ் வைப்பதால் குண்டாக தெரிய வாய்ப்புள்ளது.
* எப்போதும் நீங்கள் தேர்வு செய்யும் புடவையின் கலரிற்கு கான்டிராஸ்ட் ஆக இருக்கும், அதாவது அடர்ந்த நிறத்தில் இருக்கும் ப்ளஸ்களை அணியுங்கள். இது உங்களின் குண்டான தோற்றத்தை தாண்டி, உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க செய்யும். எத்தனை பேருக்கு நடுவில் நீங்கள் இருந்தாலும், தனித்துவமாகவும், மற்றவர்களை கவரும் வகையில் காட்சி அளிக்க முடியும்.
* உங்களின் கழுத்து பகுதி குண்டாக இருப்பதையும் மீறி மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க குந்தன் வகை நகைகளை அணிய முயற்சி செய்யலாம். இவைகள் ஒன்று அணிந்தால் கூட கழுத்து முழுவதும் நிறைந்திருப்பது போன்ற தோற்றத்தை கொடுக்கும் என்பதால் மற்றவர்களின் கவனத்தை எளிதில் கவர முடியும்.
