ஒற்றை கால் ஜீன்ஸ், இன்னொரு காலில் ட்ரவுசர் போல இருக்கும் பேண்டின் விலை ரூ.38 ஆயிரத்திற்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி அதில் என்ன ஸ்பெஷல் என இங்கு காண்போம்.
One Legged Jeans : இந்நாட்களில் ஃபேஷன் கேலிகூத்தாகி வருகிறது. ஆடைகள் உடலை மறைக்கும் நவநாகரீகம் என்பது மலையேறி ஆடைகள் காலத்தின்போக்குக்கு ஏற்றபடி மாறிவருகிறது. ஆடை ஒரு மனிதனின் மதிப்பை உயர்த்தும் காரணி என்பதை மறுக்க இயலாது. ஆனால் இப்போது ஆடைகள் அதற்கு மட்டுமின்றி ஃபேஷன் என்ற பெயரில் பல புதுமைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
உள்ளாடை வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் ஆடைகள் அணிவது, கிழிந்த ஜீன்ஸ், கண்ணாடி போல தெரியும் ஆடைகள் போன்றவை தான் இப்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில் ஒற்றைக்கால் ஜீன்ஸ் இப்போது டிரெண்டாகி வருகிறது. இந்த ஜீன்ஸ் பார்க்க ஒரு காலில் நீளமான ஜீன்ஸாகவும், இன்னொரு காலுக்கு ட்ரவுசர் போன்ற வடிவமைப்பும் கொண்டுள்ளது. இதை பிரபலமான பிரஞ்சு லக்சரி பிராண்டு வடிவமைத்து சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த “ஒற்றைக் கால் ஜீன்ஸ் பேண்ட்” விலை நம் நாட்டு மதிப்புக்கு ரூபாய் ரூ.38, 346.
இதையும் படிங்க: பெண்களின் ஜீன்ஸ் பாக்கெட் சிறியதாக இருப்பது ஏன் தெரியுமா?
சிலர் இந்த ட்ரெண்டை ஆதரித்து வந்தாலும், சிலர் இதனை அபத்தம் என விமர்சிக்கவும் செய்கின்றனர். இந்த வரிசையில் பிரபல இன்ஃப்ளூயன்சர் கிறிஸ்டிசாராவும் இணைந்துள்ளார். அவர் தன் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த ஒற்றை கால் ஜீன்ஸை இணையத்தில் உலாவும் சர்ச்சைக்குரிய ஜீன்ஸ் எனக் குறிப்பிட்டுள்ளார். இதை யார் அணிவார்? இதெல்லாம் ஒரு டிரெஸா? என அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் தாறுமாறாக பதிவிடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் உள்ள காப்பர் 'பட்டன்' சாதாரணமானதல்ல... அதுக்கு பின்னால ஒரு 'மர்மம்' இருக்கு!!
சில பயனர்கள் இந்த ஜீன்ஸ் வடிவமைப்பு, 'முட்டாள்தனம்' எனக் கூறியுள்ளனர். இதை ஓர் அரைகுறை பேஷன் என சிலர் கூறியதோடு, இந்த கால பேஷனை கடுமையாக சாடியுள்ளனர். எதிர்வினைகள் ஒரு புறம் இருந்தாலும் இந்த பேண்டை அணிய ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
