MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் உள்ள காப்பர் 'பட்டன்' சாதாரணமானதல்ல... அதுக்கு பின்னால ஒரு 'மர்மம்' இருக்கு!!

ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் உள்ள காப்பர் 'பட்டன்' சாதாரணமானதல்ல... அதுக்கு பின்னால ஒரு 'மர்மம்' இருக்கு!!

Copper Buttons On Jeans Pants : ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டுகளில் செம்பு பட்டகளை வைத்திருப்பார்கள். அதற்கான காரணத்தை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 29 2024, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Copper Buttons On Jeans Pants In Tamil

Copper Buttons On Jeans Pants In Tamil

ஜீன்ஸ் ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் பயன்படுத்தும் ஆடை. இதை சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோரும் அணிவார்கள்.  ஜீன்ஸை மற்ற ஆடைகளை போல அடிக்கடி துவைக்க தேவையில்லை. இரண்டு அல்லது மூன்று முறை போட்டுவிட்டு துவைத்தால் போதும். இதற்கிடையே அதனை உள்பக்கமாக மாற்றி வைத்து வியர்வை போன்ற ஈரப்பதம் போகும் அளவு காய வைக்க வேண்டும். இது அந்த ஆடையின் சிறப்பில் ஒன்று.

மற்றொன்று என்னவெனில் ஜீன்ஸின் பாக்கெட்டில் செம்பு அல்லது தாமிரம் அல்லது காப்பர் (copper) பட்டன்கள் இருப்பது தான். நீங்கள் எந்த ஜீன்ஸில் வேண்டுமானாலும் செப்பு பட்டனை பார்க்கலாம். ஜீன்ஸில் பிளாஸ்டிக் அல்லது இரும்பு பட்டன்கள் வைக்காமல் ஏன் செம்பு பட்டன் வைக்கிறார்கள் என்று எப்போதாவது யோசனைச் செய்துள்ளீர்களா? அதற்கான பதிலை இங்கு காணலாம். 

25
Copper Buttons On Jeans Pants In Tamil

Copper Buttons On Jeans Pants In Tamil

இந்த நவீன யுகத்தில் ஜீன்ஸ் அணிவது சாதரணமாகிவிட்டது. ஒரு ஜீன்ஸ் வாங்கிவிட்டால் பல சட்டைகளுக்கோ, சுடிதார் டாப்களுக்கோ அதை பயன்படுத்தி கொள்ளலாம்.  இது பல்வேறு டிசைன்களில்  இப்போது கிடைக்கிறது. ஜீன்ஸில் பெல் பாட்டம், டைட், ஸ்ட்ரெய்ட், ஸ்கின்னி, ரிப்ட், ஃபேட் போன்றவைகள் எப்போதும் அதிகம் வாங்கப்படும் ஜீன்ஸ்கள். 

இதையும் படிங்க:  இரவில் ஜீன்ஸ் அணிந்து தூங்கினால் உடலில் என்னென்ன மாற்றம் வரும் தெரியுமா?

35
Copper Buttons On Jeans Pants In Tamil

Copper Buttons On Jeans Pants In Tamil

இந்த ஜீன்ஸில் பொதுவாக காணப்படுவது அதன் பாக்கெட்டுகளில் உள்ள செப்பு பட்டன்கள் தான். ஜீன்ஸை மாட்ட கொடுக்கப்பட்டுள்ளவைகளும் செப்பு தான். முதல் முறை ஜேக்கப் டேவிஸ் என்பவர் தான் ஜீன்ஸை வடிவமைத்தார். 19 ஆம் நூற்றாண்டில், டேவிஸ் விவசாயிகளுக்காக தான் ஜீன்ஸ் என்ற ஆடையை வடிவமைக்கவே செய்தார்.

அந்த காலத்தில் விவசாய நிலத்தில் இறங்கி கூலி வேலை செய்பவர்களின் வேலை தான் கடினமானது.  நிலத்தில் கடுமையாக வேலை செய்வதால் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அடிக்கடி கிழிந்தன. எல்லா சமயங்களிலும் அவர்களால் புது ஆடைகளை வாங்க முடியவில்லை. இதைத் தவிர்க்க நினைத்த டேவிஸ், சீக்கிரம் கிழிக்காத துணியால் ஜீன்ஸ் என்ற ஆடையை தயாரித்தார். அது டெனிம் துணியால் செய்யப்பட்டது.  

45
Copper Buttons On Jeans Pants In Tamil

Copper Buttons On Jeans Pants In Tamil

இந்த பேண்டில் அதிக பாக்கெட்டுகள் வைக்க முடிவு செய்தனர். ஆனால் அழுத்தம் அதிகமாக இருந்தால் பேண்ட்  கிழிந்துவிடும். இதை தவிர்க்க அதிக அழுத்தம் ஏற்படும் இடங்களில் பாக்கெட்டுகளை தனியாக வைத்து அதனை  இணைக்க, காப்பர் பட்டன்களை வைத்துள்ளனர்.  இதை பயன்படுத்த பல காரணங்கள் இருந்தன. முதலாவதான காரணமாக நிலைத்தன்மையை எடுத்து கொள்ளலாம். காப்பர் உறுதியான உலோகம் என்பதால் அந்த வகை பட்டன் வைத்த ஜீன்ஸ் அதிக காலம் நீடித்தது.

இதையும் படிங்க:  துவைக்காத அழுக்கு ஜீன்ஸ் பேன்ட்டை எத்தனை நாட்கள் அணியலாம்?

 

55
Copper Buttons On Jeans Pants In Tamil

Copper Buttons On Jeans Pants In Tamil

அதுமட்டுமின்றி துணியின் பல்வேறு பகுதிகளை உறுதியாக்க காப்பர் பட்டன்கள் பயன்படுத்தப்பட்டன.  இதனால் பேண்ட்கள் எளிதில் கிழியவில்லை. இவை வெறுமனே ஆடைகளை உறுதியாக்குவது மட்டுமின்றி கவர்ச்சியான தோற்றத்தையும் தரும். காப்பர் பட்டன்கள் தான் ஜீன்ஸுக்கும் ஒரு அட்டகாசமான தோற்றத்தை அளித்தன.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved