Tea Bags: இனிமேல் பயன்படுத்திய தேயிலைகளை தூக்கி எறிய வேண்டாம்: இப்படி யூஸ் பன்னிப் பாருங்க!
சமயலறையில் பல வகைகளில் உபயோகமாக இருக்கும் என்பது பலரும் அறிந்திராத உண்மை. அவ்வகையில், தேநீருக்குப் பிறகு தேயிலையை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேநீர் மற்றும் காஃபி குடிக்கும் பழக்கம் இன்றைய மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது. தினந்தோறும் ஒவ்வொரும் தங்கள் வீட்டு சமையலறையில், பலமுறை தேநீர் தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறையும் தேநீர் தயாரித்த பின்னர், பயன்படுத்திய தேயிலைகளை தூக்கி எறிவதுண்டு. ஆனால், எதற்கும் உபயோகமில்லை என நாம் தூக்கி எறியும் தேயிலைகள், சமயலறையில் பல வகைகளில் உபயோகமாக இருக்கும் என்பது பலரும் அறிந்திராத உண்மை. அவ்வகையில், தேநீருக்குப் பிறகு தேயிலையை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாலட்
தேநீர் தயாரித்தப் பின்னர், மிச்சமிருக்கும் தேயிலைகளைக் கொண்டு சமைப்பது முதல் சுத்தம் செய்வது வரை பல செயல்களுக்கு பயன்படுத்தலாம். சாலட்டை சீசன் செய்வதற்கு தேயிலைகள் உதவுகிறது. தேயிலைகள், சாலட்டுகளுக்கு ஒரு மிகச் சிறந்த ஃபிளேவரை கொடுக்கிறது. ஈரம் நிறைந்த தேயிலைகளை நேரடியாக சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், சாலட்டில் சேர்க்க கூடிய தேயிலையானது, அன்றைய தினம் காய்ச்சிய தேநீரிலிருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை, நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஊறுகாய்
தேயிலையானது ஊறுகாய்க்கு மிகச் சிறந்த ஃபிளேவரை கொடுக்கிறது. ஊறுகாய்த் தயாரிப்பிற்கு, தேயிலை சிறந்த முறையில் பயன்படுகிறது. பயன்படுத்திய தேயிலைகள், எலுமிச்சை சாறு, எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு ஜாரில் வைத்து விடுங்கள். இந்த ஊறுகாயை ஒரு வாரம் வரை வைத்திருக்க என முடியும். அதோடு, இதனை சாண்ட்விச்கள், சாலட்டுகள் மற்றும் பிற உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம்.
சுத்தம் செய்தல்
பயன்படுத்தப்பட்ட தேயிலை, உணவாக உதவுவது மட்டுமில்லாமல், சமையலறையின் மேற்பரப்புகளை சுத்தம் செய்வதற்கும் பயன்படுகிறது. தேயிலைகளை வைத்து சுத்தம் செய்யும் போது சமயலறையில் உள்ள அழுக்கு, கிரீஸ் மற்றும் துர்நாற்றம் என அனைத்தும் நீங்கி விடும். சமையல் பாத்திரங்கள் மற்றும் கட்லரிகளில் உள்ள கறை மற்றும் துர்நாற்றத்தை நீக்க தேயிலைகளைப் பயன்படுத்தலாம்.
குளிர்சாதனப் பெட்டி
குளிர்சாதனப் பெட்டியில் பல வகையான உணவுகளை வைத்திருப்பதால், சில நேரங்களில் அதனைத் திறக்கும் போது துர்நாற்றம் வீசும். இப்படி துர்நாற்றம் வீசாமல் இருப்பதை தவிர்க்க, பயன்படுத்திய தேயிலைகளை பயன்படுத்தலாம்.
இனிமே காளான் வாங்கினா இப்படி தொக்கு செய்து சாப்பிடுங்க !
தேநீர் போட்ட பிறகு, மீதமிருக்கும் தேயிலைகளை வெயிலில் உலர்த்தி ஒரு மஸ்லின் துணியில் பேக் செய்து கொள்ள வேண்டும். இந்தப் பையை குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவுகளின் வாசனையை போக்குவதற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். இதனை ஓவன் மற்றும் மைக்ரோவேவில் உள்ள துர்நாற்றத்தைப் போக்கவும் பயன்படுத்தலாம்.
வேகவைத்த உணவு
கேக்குகள், குக்கீஸ்கள் மற்றும் மஃபின்கள் போன்ற வேகவைத்த உணவுகளில், தேநீரின் புதிய மற்றும் மூலிகைச் சுவையை சேர்த்துக் கொள்ளலாம். மேலும், பேக்கிங் மாவில் ஒருசில பயன்படுத்திய தேயிலைகளைச் சேர்த்து, வித்தியாசமான மற்றும் தனித்துவமான சுவையுடன் உணவு வகைகளை தயாரிக்க முடியும்.