Asianet News TamilAsianet News Tamil

மும்பையை வீழ்த்தணும்னா அந்த பையன் கண்டிப்பா வேணும்!! இவன் சரியா வரமாட்டான்.. 2 அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் பஞ்சாப்.. உத்தேச அணி

ராஜஸ்தானை வீழ்த்திய பஞ்சாப் அணி, கேகேஆரிடம் தோற்றது. டெல்லி கேபிடள்ஸ் அணியிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபியை வீழ்த்தியது. இரு அணிகளுமே இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இன்று மோதுகின்றன. 
 

probable eleven of punjab team to play against mumbai indians
Author
India, First Published Mar 30, 2019, 3:21 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு போட்டிகள் நடக்கும். அந்த வகையில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன.

மூன்று முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் முதன்முறையாக கோப்பையை வெல்ல முனையும் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை இரு அணிகளுமே தலா 2 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியை பெற்றுள்ளன. 

ராஜஸ்தானை வீழ்த்திய பஞ்சாப் அணி, கேகேஆரிடம் தோற்றது. டெல்லி கேபிடள்ஸ் அணியிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபியை வீழ்த்தியது. இரு அணிகளுமே இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இன்று மோதுகின்றன. 

probable eleven of punjab team to play against mumbai indians

இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 2  அதிரடி மாற்றத்துடன் களமிறங்க வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் ஆடிய ஹார்டஸுக்கு பதிலாக முஜீபுர் ரஹ்மான் இந்த போட்டியில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல எட்டரை கோடி கொடுத்து எடுக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி கடந்த போட்டியில் சொதப்பினார். மும்பை அணியின் பின்வரிசை வீரர்கள் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஸ்பின்னை அடித்து ஆடக்கூடியவர்கள் என்பதால் இந்த போட்டியில் அவருக்கு பதிலாக ராஜ்பூத் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. 

உத்தேச பஞ்சாப் அணி:

ராகுல், கெய்ல், அகர்வால், சர்ஃபராஸ், மந்தீப் சிங், டேவிட் மில்லர், அஷ்வின்(கேப்டன்), ஷமி, முஜீபுர் ரஹ்மான், ஆண்ட்ரூ டை, ராஜ்பூத்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios