Asianet News TamilAsianet News Tamil

ஆர்சிபியை மிரட்ட வர்றார் மலிங்கா.. மில்னேவுக்கு பதில் வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலர்!! உற்சாகத்துடன் களம் காணும் மும்பை இந்தியன்ஸ்

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய முதல் போட்டியில் நட்சத்திர பவுலர் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு பெரிய காயம் இல்லை. விரைவில் குணமாகிவிடுவார் என கூறப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கையாக ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

mumbai indians replaced adam milne absense by west indies pacer alzarri joseph
Author
India, First Published Mar 28, 2019, 1:43 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் தலா 2 வெற்றிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் முறையே முதல் மற்றும் இரண்டாமிடத்தில் உள்ளன. அதேநேரத்தில் ஒரு போட்டியில் ஆடி அதிலும் படுதோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸும் திகழ்கின்றன. கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஆனால் சென்னை அணி கடந்த சீசனில் கோப்பையை வென்றது. 

கடந்த சீசனில் முதல் 7 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. கடைசி 7 போட்டிகளில் 4ல் வென்றது. எனினும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. கடந்த சீசனில் மும்பை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் குறைகளாக இருந்தன. எனவே அதை களைவதற்காக, கடந்த சீசனில் பவுலிங் பயிற்சியாளராக இருந்த மலிங்காவை மீண்டும் அணியில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ். மேலும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே ஆகிய இருவரையும் அணியில் எடுத்தது.

mumbai indians replaced adam milne absense by west indies pacer alzarri joseph

அந்த அணியின் நட்சத்திர பவுலராக திகழ்ந்த மலிங்காவை மீண்டும் அணியில் இணைத்த மகிழ்ச்சியில் இருந்தது மும்பை இந்தியன்ஸ். ஆனால் உலக கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெற வேண்டுமானால் ஏப்ரல் 4 முதல் 11 வரை அங்கு நடக்கும் உள்நாட்டு தொடரில் அனைத்து வீரர்களும் ஆட வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டதால், மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய முதல் போட்டியில் ஆடமுடியவில்லை. 

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய முதல் போட்டியில் நட்சத்திர பவுலர் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு பெரிய காயம் இல்லை. விரைவில் குணமாகிவிடுவார் என கூறப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கையாக ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. எனவே மலிங்கா கண்டிப்பாக அந்த அணிக்கு தேவை. இதையடுத்து பிசிசிஐ-யும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பேசியது. உலக கோப்பை அணியில் மலிங்கா இடம்பெறுவது உறுதி என்பதால், அவர் ஐபிஎல்லில் ஆட இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது. 

mumbai indians replaced adam milne absense by west indies pacer alzarri joseph

இதையடுத்து இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் ஆடும் போட்டியில் மலிங்கா ஆட உள்ளார். மலிங்காவின் வருகை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளதோடு ரசிகர்களுக்கும் குதூகலப்படுத்தியுள்ளது. மலிங்கா திரும்பிவரும் அதே வேளையில், காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆடம் மில்னேவுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது. எனவே அவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைகிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios