அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு குறித்து Zomato தலைவர் தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இந்திய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

சமீபத்தில் அமெரிக்கா இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் சில பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதித்துள்ளது. தற்போது இதுகுறித்து Zomato நிறுவனத் தலைவர் தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ள பதிவு அனைவரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உலக சக்திகள் எப்போதும் நம்மை மிரட்டிக் கொண்டே இருக்கப் போகின்றன. நாம் நம் விதியை நாமே எழுதத் தயாராக இருந்தால் மட்டுமே அது மாறும். அதற்கு ஒரே வழி நாம் நம்மைத் திறமையாகவும், துணிச்சலாகவும் உலகின் மிகப்பெரிய, மிகத்தன்னம்பிக்கையுள்ள சூப்பர்பவராக மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இக்கருத்துக்கள் தற்போது வளர்ந்து வரும் இந்திய நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா விரிவாக வளர வேண்டிய அவசியம் உள்ளது; அதிகரிக்கும் வளர்ச்சி போதாது என்பதே அனைவரது மனப்பான்மையாக உள்ளது.