இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீங்கள் தான் பாலமாக இருக்கிறீர்கள் எனவும், உங்கள் முனேற்றம் எங்கள் பெருமையாகும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவர் அந்நாட்டில் கொண்டாடப்பட உள்ள வெசாக் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், இலங்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

உங்கள் முன்னேற்றம் எங்கள் பெருமையாகும்.

வாழ்வின் பல்வேறு பகுதியில் உங்கள் சாதனைகளை கண்டு பெரும் மகிழ்ச்சியை அடைகிறோம்.

இந்திய அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையே இருக்கும் இணைப்பு நீங்கள். இரு நாட்டு பந்தங்களின் தொடர்ச்சியாகவே நாங்கள் உங்களை பார்க்கிறோம்.

என் அரசின் முன்னுரிமை இந்திய இலங்கை மக்களின் வாழ்வை மேம்படுத்துவது.

இந்தியாவினுடைய பிணைப்பை நீங்கள இன்னும் தக்கவைத்து கொண்டு உள்ளீர்கள்.

உங்கள் சொந்தங்களும் பந்தங்களும் இந்தியாவில் வாழ்கிறார்கள். இந்திய பண்டிகைகளை உங்கள் பண்டிகையாக கொண்டாடுகிறீர்கள்.

இந்தியா உங்கள் எல்லோர் இதயத்திலும் துடிக்கிறது. உங்கள் அரவணைப்பை இந்தியா முழுவதுமாக பிரதிபலிக்கிறது.

இந்தியா உதவியுடன் இலங்கையில் மேலும் 10 ஆயிரம் வீடுகள் காட்டப்படும்.

இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவும்.

மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த 1947 ஆம் ஆண்டு இலங்கை தொட்ட தொழிலாளர் அறக்கட்டளை கட்டப்பட்டது.

மேற்கு தெற்கு மாகாணங்களில் 1990 ஆம்புலன்ஸ் வசதி விரிவு செய்து தரப்படும்.

வருடம் தோறும் இலங்கை மாணவர்கள் 700 பேருக்கு இந்தியா மூலம் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

சற்று நேரத்திற்கு முன்பு இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட 150 படுக்கை வசதிகள் கொண்ட வைத்திய சாலை ஒன்றை இலங்கை அரசுக்கு அற்பனித்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.