கவிஞர் கபீர் தாஸ் மசூதியில், மதகுரு கொடுத்த குல்லாவை அணிய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிறந்து மிகப்பெரிய மத குருவாகவும், கவிஞராகவும் திகழ்ந்தவர் கபீர்தாசர். அவரது 500-வது நினைவு தினத்தையொட்டி லக்னோவில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். பிரதமரின் வருகையையொட்டி ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அந்த கோயிலுக்கு சென்றார்.

கபிர் தாஸின் நினைவிடத்துக்குள்ளே சென்ற ஆதித்யநாத்-க்கு கோயில் நிர்வாகி காதிம் ஹுசைன் என்பவர் குல்லா ஒன்றை அன்பளிப்பாக யோகியின் தலையில் அணிவிக்க முயற்சித்தார்.

அப்போது முதலமைச்சர் யோகி மிகவும் நாசுக்காக சிரித்துக் கொண்டே குல்லாவை அணிவிக்க வேண்டாம் என்று தடுத்து விட்டார். இது குறித்து காதிம் ஹுசைன், கபிர் தாஸின் மசூதிக்கு வந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு குல்லா அணிவிக்க முயன்றேன். அதை அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார். எனினும் குல்லாவை பெற்றுக் கொண்டார் என்று கூறினார்.

2011 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக நரேந்திரமோடி இருந்தபோது, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தபோது, மதகுரு கொடுத்த குல்லாவை அவர் அணிந்து கொள்ள மறுத்தது குறிப்பிடத்தக்கது.