Asianet News TamilAsianet News Tamil

சிறுத்தை குட்டிகளுக்கு பெயர்வைத்து உணவளித்தார் முதல்வர் யோகி… இணையத்தில் வீடியோ வைரல்!!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 2 சிறுத்தை குட்டிகளுக்கு பெயர் சூட்டியதோடு அதற்கு உணவளித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

yogi adityanath named two newly born cubs at gorakhpur zoo and video goes viral
Author
First Published Oct 5, 2022, 10:28 PM IST

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 2 சிறுத்தை குட்டிகளுக்கு பெயர் சூட்டியதோடு அதற்கு உணவளித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஷஹீத் அஷ்பாக் உல்லா கான் பிராணி உதியான் என்னும் கோரக்பூர் விலங்கியல் பூங்காவில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு புதிதாக 2 சிறுத்தைக் குட்டிகள் பிறந்திருந்தன. இதை அடுத்து புதிதாக பிறந்த 2 சிறுத்தை குட்டிகளுக்கும் சண்டி, பவானி என்று பெயர் சூட்டினார்.

இதையும் படிங்க: மசூதியில் தொழுகைக்கான அழைப்பு வந்ததும் பேச்சை நிறுத்திய அமித் ஷா

பின்னர் அந்த குட்டிகளை அரவணைத்து உணவூட்டினார். முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறுத்தைக்கு தனது கைகளால் உணவளிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர் ஒருவர் சிறுத்தைக்குட்டியை முதல்வரிடம் வழங்குகிறார். பாதுகாப்பான ரப்பர் கையுறைகளை அணிந்துள்ள யோகி ஆதித்யநாத் சிறுத்தைக் குட்டிக்கு பால் புட்டியில் பால் வழங்குகிறார். சிறுத்தை குட்டி பால் குடிக்க தயங்கியது.

இதையும் படிங்க: "எனக்கு பத்து தல இருக்கு.. ஆனா உனக்கு ஒரே ஒரு தலை தான்".. மாஸ் எண்டரி கொடுக்கும் ராவணன்..

பின்னர் கால்நடை மருத்துவர், மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறுத்தை குட்டியை பிடித்திருக்க யோகி ஆதித்யநாத் புட்டியில் இருந்த பாலை வழங்கினார். அப்போது பாலை சிறுத்தை குட்டிகள் குடித்தன. இது குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் மார்ச் 18 அன்று கோரக்பூர் உயிரியல் பூங்காவிற்கு வந்த போது ஹார் மற்றும் கௌரி என்ற இரண்டு காண்டாமிருகங்களுக்கு வாழைப்பழங்களை ஊட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios