Asianet News TamilAsianet News Tamil

amit shah baramulla: மசூதியில் தொழுகைக்கான அழைப்பு வந்ததும் பேச்சை நிறுத்திய அமித் ஷா

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் தொழுகைக்கான ஆசான் அழைப்பு விடுக்கப்பட்டதும், மேடையில் பேசிக்கொண்டிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சை நிறுத்தி அமைதி காத்தார்

Amit Shah stop his speech for 'Azaan' during Baramulla rally
Author
First Published Oct 5, 2022, 4:41 PM IST

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் தொழுகைக்கான ஆசான் அழைப்பு விடுக்கப்பட்டதும், மேடையில் பேசிக்கொண்டிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சை நிறுத்தி அமைதி காத்தார்

பாஜக சார்பில் இன்று நடத்தப்படும் பொதுக்கூட்டம் அருகே மசூதி இருந்தாதால், தொழுகைக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதால், அமித் ஷா பேச்சை நிறுத்தினார்.

கொரோனா காலத்தில் ஏழைகளுக்கான உதவி அற்புதமானது: இந்தியாவுக்கு உலக வங்கி தலைவர் பாராட்டு

ஜம்மு காஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார். வடக்கு காஷ்மீர் மாவட்டமான பாரமுல்லாவில் உள்ள சவுதக் அலி மைதானத்தில் பாஜக சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அந்த கூட்டத்தில் அமித் ஷா பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒலிபெருக்கியில் ஏதோசத்தம் கேட்டது. உடனே தனது பேச்சை நிறுத்திய அமித் ஷா அருகே இருந்த நிர்வாகியை அவைத்து என்ன சத்தம், மசூதியிலிருந்து ஏதோ சத்தம் ஒலிக்கிறேதே எனக் கேட்டார்.

அதற்கு அந்த பாஜக நிர்வாகி, “ மசூதியில் பாங்கு சொல்கிறார்கள், அதாவது தொழுகைக்கு அழைப்பு விடுக்கிறார்கள் “ எனத் தெரிவித்தார். 

தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

இதைக் கேட்டதும் அமித் ஷா தனது பேச்சை நிறுத்திவிட்டுஅமர்ந்தார். இந்தச் செயலைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கைதட்டி, பாஜகவுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அதன்பின் மசூதியில் தொழுகை முடிந்துவிட்டது என்பதை உறுதி செய்தபின், நான் பேசத் தொடங்கலாமா, சத்தமாகக் கூறுங்கள் என்று மக்களிடம்  கேட்டுவிட்டு, அமித் ஷா மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தார். 

அமித் ஷா வருகைக்காக மைதானத்தில் காலையிலிருந்து மக்கள் காத்திருந்தனர். ஆனால், தனது தாமதமான வருகையால், மக்களை நீண்டநேரம் காக்க வைக்காமல் வந்தவுடன் சிறிது நேரத்தில் பேசத் தொடங்கினார். 

இமாச்சலில் ரூ.1470 கோடி செலவில் உருவான எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஜம்மு காஷ்மீர் லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் சின்ஹா, பிரதமர்  அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் ஆகியோர் அமித்ஷாவுடன் பங்கேற்றனர்

Follow Us:
Download App:
  • android
  • ios