Asianet News TamilAsianet News Tamil

"எனக்கு பத்து தல இருக்கு.. ஆனா உனக்கு ஒரே ஒரு தலை தான்".. மாஸ் எண்டரி கொடுக்கும் ராவணன்..

சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், ஹெல்மட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மும்பை காவல்துறை விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. 
 

Mumbai traffic police shares Ravanan video for using helmet awareness
Author
First Published Oct 5, 2022, 4:14 PM IST

ஹெல்மேட் அணியாமல் பயணம் மேற்கொள்ளுவதன் மூலம் ஏற்படும் விளைவை மக்கள் புரியும் வகையில் நகைச்சுவை உணர்வுடன் விழிப்புணர்வு வீடியோவை மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க:the world bank: கொரோனா காலத்தில் ஏழைகளுக்கான உதவி அற்புதமானது: இந்தியாவுக்கு உலக வங்கி தலைவர் பாராட்டு

\மும்பை காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை சேர்த்து இந்த விழிப்புணர்வு வீடியோ தயாரித்துள்ளனர். மேலும் இதில் ஹெல்மேட் அணியாமல் ஆபத்தான முறையில் பயணம் செல்லும் மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவரும் வகையில், கேலி கிண்டலுடன் மிக நூட்பமாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவில்,” இருசக்கரவாகனத்தில் சிக்னலில் ஹெல்மேட் போடாமல் நிற்கும் பத்து தலைக்கொண்ட ராவணன், அருகில் நிற்கும் மற்றோரு நபரை ஹெல்மேட் அணியாமல் இருப்பதை பார்த்து “எனக்கு பத்து தலை உள்ளது. ஆனால் உங்களுக்கு ஒரே ஒரு தலை மட்டும் தான்” என்று கிண்டல் செய்துவிட்டு சட்டென்று அங்கிருந்து புறப்படுகிறார்.

மேலும் படிக்க:வருணா! மனிதர்களைச் சுமந்து செல்லும் ட்ரோன்: விரைவில் கப்பற்படையில் சேர்ப்பு

இந்நிலையில் சமூக வலைதளத்தில் பலரும் வீடியோவை டேக் செய்து பாராட்டி வருகின்றனர்.  மேலும் இதுக்குறித்து பேசிய மும்பை காவல் ஆணையர் ,” வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் மிக முக்கியம். எனவே அனைவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios