நேபாளத்தில் எட்டி விமானம் விபத்து: 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழப்பு!!
நேபாளத்தில் 72 பேருடன் சென்ற எட்டி விமானம் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் 72 பேருடன் சென்ற எட்டி விமானம் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் காத்மண்டுவிலிருந்து பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு 68 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் என்று மொத்தமாக 72 பேருடன் சென்ற எட்டி விமானம் (Yeti Airlines) ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அதோடு விமானம் தீப்பிடித்து எரிந்ததில் விமானத்தில் சென்ற 72 பேரில் 29 பேரது உடல்கள் மட்டுமே முதல்கட்டமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், பொக்காரா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்தில் விமானத்தில் சென்ற 72 பேரில் 68 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்றும் அவர்கள் அபிசேக் குஷ்வாஹா, பிஷால் ஷர்மா, அனில் குமார் ராஜ்பார், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: யாரும் சாதிக்க முடியாததை சாதித்தவர் மோடி: பாகிஸ்தான் எழுத்தாளர் புகழாரம்
இதையும் படியுங்கள்: Vande Bharat: புதிய வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி