Yesterday sushma today venkaiah naidu - bjp is confusing

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை விட குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஜுரம் நாடு முழுவதும் தகித்து வருகிறது.

ஜூலை 17 ஆம் தேதி இந்தியாவின் முதல் குடிமகனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. நாட்டின் 14 ஆவது குடியரசுத் தலைவர் யார் என்பதற்கான விடை 20 தேதி அறிவிக்கப்படவுள்ளன.

சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக பெரும்பான்மை பலத்தோடு தேர்தலை எதிர்கொள்ளும் பா.ஜ.க., யாரை வேட்பாளராக முன்னிறுத்தவது என்று ஏகத்துக்கும் குழம்பி நிற்கிறது.

பா.ஜ.க.வின் உத்தேசப் பட்டி.யிலில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரெளபதி முர்மு ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களில் ஒருவர் வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தனது வேட்பாளராக பா.ஜ.க. மேலிடம் தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்தத் தகவல் நாளிதழ்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும் ஹெட்லைன்ஸ் ஆக, நான் குடியரசுத் தலைவர் வேட்பாளரா.? நெவர் என்று தந்தி அடித்தார் சுஷ்மா..

இந்தச் சூழலில் பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் இவராக இருக்குமே என்ற பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு…

இதற்கிடையே பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ளார். 

இதனைத் தொடர்ந்து வேட்பாளரை இறுதி செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க.தேசியத் தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளராக வெங்கையாநாயுடு முன்னிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.