அடுத்த தேர்தல் என் மகன் போட்டியிடுவார்… அவருக்கும் ஆதரவளியுங்கள்… எடியூரப்பா அதிரடி அறிவிப்பு!!

அடுத்த தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் தனது மகன் விஜயேந்திரர் போட்டியிடுவார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

yediyurappa gives up shikaripura constituency to his son vijayendra

அடுத்த தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் தனது மகன் விஜயேந்திரர் போட்டியிடுவார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். ஷிகாரிபூர் தாலுகாவில் உள்ள அஞ்சனாபுராவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய எடியூரப்பா, நான் ஷிகாரிபூரில் போட்டியிடப் போவதில்லை. மாறாக எனது மகன் விஜயேந்திரர் போட்டியிடுவார்.

இதையும் படிங்க: ஜனாதிபதி தேர்தல்: வெற்றி பெற்ற திரெளபதி முர்மு-வுக்கு சான்றிதழ் வழங்கியது தேர்தல் ஆணையம்

இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எனக்கு ஆதரவளித்ததைப் போல அவருக்கும் உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவரைத் தேர்ந்தெடுக்க நான் பிரார்த்திக்கிறேன். அடுத்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுதந்திர தினத்தின்போது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில துணைத் தலைவரும் எடியூரப்பா மகனுமான விஜயேந்திரர், எனது தந்தை மற்றும் கட்சி எடுக்கும் முடிவின்படி நடப்பேன் என்று தெரிவித்தார். எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விஜயேந்திரர், எனது தந்தையின் அகராதியில் ஓய்வு என்ற வார்த்தைக்கே இடமில்லை. அவர் பயணம் செய்து கட்சியை பலப்படுத்துவார் என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios