draupadi murmu: ஜனாதிபதி தேர்தல்: வெற்றி பெற்ற திரெளபதி முர்மு-வுக்கு சான்றிதழ் வழங்கியது தேர்தல் ஆணையம்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்வுக்கு சான்றிதழை தேர்தல் ஆணையம் இன்று வழங்கியது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்வுக்கு சான்றிதழை தேர்தல் ஆணையம் இன்று வழங்கியது.
நாட்டின் 15-வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்வும், அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.
டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தில் 4,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு
எம்.பிக்கள், மாநிலங்களின் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரெளபதி முர்மு 6 லட்சத்து 76ஆயிரத்து 803 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். யஷ்வந்த் சின்ஹா 3 லட்சத்து 80ஆயிரத்து 177 வாக்குகள்தான் பெற்றார்.
இதையடுத்து, நாட்டிலேயே பழங்குடியினத்தைச்சேர்ந்த ஒருவர் முதல்முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்கஉள்ளார். அதுமட்டுமல்லாமல் தேசம் சுதந்திரம் அடைந்தபின், குறைந்த வயதில் ஜனாதிபதியாக பதிவி ஏற்கும் முதல் பெண் முர்மு(வயது64). ஜனாதிபதியாக 2-வது பெண் என்ற பெருமையும் முர்முக்கு கிடைக்கும்.
ஜனாதிபதியாகிறார் திரெளபதி முர்மு: 20ஆயிரம் லட்டு தயார்: சொந்த ஊரில் கொண்டாட்டம் ஆரம்பம்
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரெளபதி முர்முவுக்கு, வெற்றிச் சான்றிதழை தேர்தல் ஆணையம் இன்று வழங்கியது.
தேர்தல் ஆணையம் பதிவிட்ட ட்விட்டர் செய்தியில் “ தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இருவரும் கையொப்பமிட்ட வெற்றிச்சான்றிதழ், அடுத்த ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் திரெளபதி முர்முவிடம் வழங்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பதவிஏற்பு விழா நிகழ்ச்சியின்போது, இந்த சான்றிதழில் குறிப்பிட்டுள்ளபடி கூறி 15-வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு பதவி ஏற்பார்.
இந்திய குடியரசு தலைவருக்கு சம்பளம் எவ்வளவு .? அவருக்கு உள்ள சலுகைகள், அதிகாரங்கள் என்ன தெரியுமா.?
தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிகிறது. வரும் 25ம்தேதி நாடாளுமன்றத்தின் மைய அவையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது