நமது நாட்டின் சுதந்திரதினம் வரும்போது ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதிவரை மக்கள் அனைவரும் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றி வைத்து மூவர்ணக் கொடி இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

நமது நாட்டின் சுதந்திரதினம் வரும்போது ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதிவரை மக்கள் அனைவரும் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றி வைத்து மூவர்ணக் கொடி இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Scroll to load tweet…

நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. சுதந்திரதினம் தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

பழங்குடி மற்றும் ஆதிவாசி சகோதர சகோதரிகளின் மேம்பாட்டிற்காக பாடுபடுவேன்… திரௌபதி முர்மு உறுதி!!

அவர் பதிவிட்ட கருத்தில் “ ஜூலை 22ம் தேதிக்கும்( இன்று) நமது வரலாற்றுக்கும் சிறப்பான பொருத்தம் இருக்கிறது ஆழ்ந்த தொடர்ந்து இருக்கிறது. 1947ம் ஆண்டு, ஜூலை 22ம் தேதி தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்.

Scroll to load tweet…

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு எதிராக நாம் போராடியபோது, தேசியக் கொடி குறித்து கவனவு கண்டவர்களின் துணிச்சல், முயற்சிகளை நாம் இன்று நினைவு கூறுகிறோம். அவர்களின் தொலைநோக்குகளை நிறைவேற்றவும், அவர்கள் கனவு கண்ட இந்தியாவை கட்டி எழுப்பவும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை வலியுறுத்துகிறேன். 

மீண்டும் இந்தியாவிடம் வாலாட்டும் ஜி ஜின்பிங்... அடி வாங்காம போக மாட்டா போல சீனாக்காரன்.

இந்த ஆண்டு நாம் 75-வது சுதந்திரன விழாவை கொண்டாடப் போகிறோம். இந்த நேரத்தில் நாம் தேசியக் கொடி இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும். இதற்காக ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதிவரை நமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும். இந்த தேசியக் கொடி இயக்கம் நமது தொடர்பை ஆழமாக வைக்கும்”

Scroll to load tweet…

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2024-தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; மத்தியில் மக்கள் அரசு தேவை: மம்தா பானர்ஜி சரவெடி

அது மட்டுமல்லாமல், தேசியக் கொடியை நாம் ஏற்றுக்கொண்டது தொடர்பான அதிகாரபூர்வ ஆவணத்தையும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் வெளியிடப்பட்ட தேசியக் கொடியின் படத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.