Asianet News TamilAsianet News Tamil

IAF வீரர்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூடு நடத்தியது யாசின் மாலிக் தான் - சாட்சி அளித்த வாக்குமூலம்!

Yasin Malik : சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1990 ஆம் ஆண்டு, ஸ்ரீநகருக்கு வெளியே யாசின் மாலிக் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு விமானப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டனர், மேலும் 22 பேர் காயமடைந்தனர்.

Yasin Malik identified as shooter in 1990 attack on Air force men by eyewitness ans
Author
First Published Jan 18, 2024, 8:44 PM IST

கடந்த 1990 ஆம் ஆண்டு ஸ்ரீநகருக்கு வெளியே நான்கு IAF வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற, அந்த முக்கிய துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் என்று முன்னாள் இந்திய விமானப் படை (IAF) ஊழியர் மற்றும் வழக்குத் தொடரின் முக்கிய நேரில் கண்ட சாட்சி அடையாளம் காட்டினார்.

சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 25, 1990 அன்று ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ராவல்போராவில் யாசின் மாலிக் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் IAF அதிகாரி ரவி கான் மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டனர், மேலும் அந்த துப்பாக்கி சூட்டில் 22 பேர் காயமடைந்தனர். டெல்லி திகார் சிறையில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) சிறப்பு நீதிமன்றத்தில் மாலிக்கை ஆஜர்படுத்தியபோது, ராஜ்வர் உமேஷ்வர் சிங். மாலிக் தான் குற்றவாளி என்று அடையாளம் காட்டினார். மாலிக் கடந்த 2018 முதல் இங்கு அடைக்கப்பட்டுள்ளார்.

ராமர் கோவில் திறப்பு.. ஜனவரி 22க்கு பின் "ஆஸ்தா" சிறப்பு ரயில்கள் அறிமுகமாகும் - இந்திய ரயில்வே அறிவிப்பு!

1990ல் என்ன நடந்தது?

ஜனவரி 25, 1990 அன்று ஸ்ரீநகரில் இந்திய விமானப் படை வீரர்கள் மீது யாசின் மாலிக் தலைமையிலான பயங்கரவாதிகளின் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்தனர். மாலிக் அப்போது ஜேகேஎல்எப் என்ற பயங்கரவாதக் குழுவின் தலைவராக இருந்தார். 1990ல் மாலிக் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

பிரிவினைவாத தலைவர் 1994ல் விடுவிக்கப்பட்டார் மற்றும் உயர் நீதிமன்றம் 1995ல் அவரது விசாரணைக்கு தடை விதித்தது. அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாலிக் JKLF ஐப் பிரித்தார். அவர் வன்முறையற்ற பிரிவினைவாதப் பிரிவை வழிநடத்தியபோது, ​​நிறுவனர் அமானுல்லா கான் வன்முறைப் பிரிவைத் தொடர்ந்து வழிநடத்தினார்.

யாசின் மாலிக் யார்?

யாசின் மாலிக் ஒரு முக்கிய அரசியல் ஆர்வலராகத் தனது பயணத்தை தொடங்கினர், ஆனால் பின்னர் அவர் பயங்கரவாதத்திற்கு மாறினார். பின்னர் 1990களின் நடுப்பகுதியில் பிரதான பிரிவினைவாதத்தில் சேர்ந்தார். 1989ஆம் ஆண்டு அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீதின் மகள் ரூபையா சயீத் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜடந்த ஏப்ரல் 2019ல், மாலிக் தனது குழுவை மத்திய அரசு தடை செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, பயங்கரவாத நிதி தொடர்பான வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார்.

இந்தியா - ஐரோப்பிய ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திறகு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Follow Us:
Download App:
  • android
  • ios