Asianet News TamilAsianet News Tamil

ஜியோமி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! சார்ஜ் செய்த போது வெடித்த ஸ்மார்ட் போன்!

ஜியோமி நிறுவனத்தின் எம்ஐ ஸ்மார்ட் போன் சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறிய சம்பவம் பயனாளர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Xiaomi Mi A1 explode while charging
Author
Delhi, First Published Oct 5, 2018, 4:59 PM IST

ஜியோமி நிறுவனத்தின் எம்ஐ ஸ்மார்ட் போன் சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறிய சம்பவம் பயனாளர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் mia1 என்ற ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 4ஜிபி ராம், 3080 எம்ஏஎச் பேட்டரி லெவல் உடன் இயங்கக்கூடியது. இந்த ஸ்மார்ட்போன் வந்ததிலிருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. Xiaomi Mi A1 explode while charging

ஆரம்பத்தில், சிறிது நேரம் பேசினால் கூட, சூடேறி விடுவதாக அடுத்தடுத்து புகார் வந்தது. பின்னர் அதை சரி செய்தது ஜியோமி நிறுவனம். இந்நிலையில் ஜியோமி mia1 ஸ்மார்ட்போனை ஜார்ஜ் செய்தபோது அது தீப்பிடித்து எரிந்ததாக பயனாளி ஒருவரின் நண்பர், ஜியோமியின் இணையதள பக்கத்தில் சென்று புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஜியோமி mia1 ஸ்மார்ட்போனை எனது நண்பர் வாங்கி 8 மாதங்கள் ஆகிவிட்டது.

இதுவரை இந்த ஸ்மார்ட்போனில் எந்த பிரச்சினையும் நண்பர் சந்திக்கவில்லை. சூடாகவோ அல்லது வேறு ஏதாவது பிரச்சினையோ இல்லை. இந்த நிலையில், நண்பர் ஸ்மார்ட் போனை சார்ஜில் வைத்துவிட்டு, படுக்கைக்குப் போய் விட்டார். நள்ளிரவில் ஏதோ ஒரு சத்தத்தைக் கேட்டு எழுந்த அவர், பின்னர் அதை கண்டுகொள்ளாமல் உறங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது தான் சார்பில் வைத்திருந்த ஜியோமி mia1 ஸ்மார்ட்போன் எரிந்து நாசமானது தெரிந்தது என்று கூறியதுடன், எரிந்து போன ஜியோமி mia1 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

 Xiaomi Mi A1 explode while charging

எனது நண்பர் ஸ்மார்ட்போனுக்கு கவர் போட்டு இருந்தார். அந்த கவர் இல்லாவிட்டால் அவர் கூட காயம்பட்டு இருக்கக்கூடும் என்று கூறியுள்ள அவர், ஜியோமி நிறுவனம் உரிய இழப்பீடு வழங்கும் என்று நம்புகிறேன் என்று அந்த புகார் பகுதியில் தெரிவித்திருந்தார். இதைப்பார்த்த ஜியோமி நிறுவனம் வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டதோடு,  அதுகுறித்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஜியோமி நிறுவனம் பிரச்சனையை ஆலோசிக்கிறதா அல்லது இழப்பீடு வழங்குவதை குறித்து ஆலோசிக் கிறதா என்பதை வெளிப்படையாக கூறாத நிலையில், ஜியோமி ஏ1 mia1 ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வருவோருக்கு பயனாளி ஒருவரின் கூறியுள்ள புகார், பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios