பட்டினியால் வாடும் மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 97-வது இடம் பிடித்துள்ளது. உலக அளவில் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் 118 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
மேலே குறிப்பிட்ட 118 நாடுகளில் மக்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து, வீணாக்கப்படும் உணவு, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி விகிதம், குழந்தை இறப்பு விகிதம் ஆகிய விஷயங்களைக் கொண்டே பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, நைகர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் உள்ளன. அடுத்த நிலையில் இலங்கை, வங்கதேசம், நேபாளம், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு அடுத்த நிலைகளில் உள்ளன.
பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 97-வது இடத்தை பிடித்துள்ளது. 15 சதவீதம் பேர் சாப்பிடும் உணவு தரம் மற்றும் அளவில் பற்றாக்குறை, குழந்தைகள் உயிரிழப்பு 4.8 சதவீதம், ஊட்டச்சத்து குறைபாடு 39 சதவீதம் என்ற அளவீட்டின்படி இந்தியா 97-வது இடத்தைப் பிடித்துள்ளது.
