கொரோனா லாக்டவுன் காலத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்தன. அப்போது ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களும்,  பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கும் வீடியோ கால் வரப்பிரசாதமாக அமைந்தது. அப்படி ஆன்லைன் நடக்கும் பள்ளி, கல்லூரி வகுப்புகளின் போது மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையிலான காமெடி வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

தற்போது ஆன்லைன் மீட்டிங்கில் இருக்கும் கணவனுக்கு மனைவி முத்தம் கொடுக்க பாய்ந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜூம் கால் மீட்டிங்கில் ஒருவர் தீவிரமாக ஆபீஸ் குறித்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அவருடைய மனைவி, கணவன் ஏதோ பாட்டு கேட்டுக்கொண்டிருப்பதாக நினைத்து முத்தம் கொடுக்க நெருங்கி வருகிறார். இதனால் அதிர்ச்சியான கணவன், என்ன செய்கிறார் ஆபீஸ் மீட்டிங் காலில் இருக்கிறேன் என்பது போல் வெடுக்கென முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்கிறார். இதனால் திகைத்துப் போன அந்த பெண்ணும் செய்வதறியாது முகத்தை திருப்பிக் கொள்கிறார். 

சோசியல் மீடியாவில் படுவேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவை பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, தனது ட்விட்டர் பக்கத்தில், 'வேடிக்கையான ஜூம் கால்' என ட்வீட் செய்துள்ளார். மற்றொரு தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டிற்கான சிறந்த மனைவியாக இந்த பெண்னை பரிந்துரைக்கிறேன். கணவர் மகிழ்ச்சியுடன், மலர்ச்சியுடனும் இருந்திருந்தால் நான் அவர்களை இந்த ஆண்டின் சிறந்த ஜோடி என பரிந்துரைத்திருப்பேன்” என பாராட்டி அந்த வீடியோவும் பதிவிட்டுள்ளார்.