நீட் தேர்வின் போது கூட மாணவ மாணவிகள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதே போல சமீபத்தில் தெலுங்கானாவில் கிராம வருவாய் அதிகாரி தேர்வின் போது நடைபெற்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானாவில் நடைபெற்ற இந்த அரசு தேர்விற்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருக்கின்றன. 

2000 தேர்வு மையங்களில் வைத்து இந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. நாசர்பூர் எனும் பகுதியில் உள்ள தனியார் பள்ளி சிலருக்க்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு தான் தேர்வு எழுதும் முன்னர் தாலியை கழட்டி வைத்துவிட்டு வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும்  தாலியை கழற்றாமல் வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டீர்கள்  என உறுதியாக தெரிவித்திருக்கின்றனர்.  இதனால் அங்கு தேர்வு எழுத சென்ற திருமணமான பெண்கள் தங்கள் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு தான் கடைசியில் தேர்வு எழுதி இருக்கின்றனர்.

அந்த மையத்தில் தேர்வு எழுத சென்ற 290 பெண்களும் இதை செய்ய வேண்டி இருந்திருக்கிறது. இதனால் கடும் மன உளைச்சலுடன் தான் தேர்வு எழுதி இருக்கின்றனர் அந்த பெண்கள். இந்த சம்பவம் இப்போது தெலுங்கானாவில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.