Women's reservation bill 2023: புதிய இந்தியாவின், புதிய ஜனநாயகத்தின் தொடக்கம்: பிரதமர் பெருமிதம்!!
பெண்கள் மசோதா நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை இன்று பிரதமர் மோடி டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவகத்தில் எம்பிக்களுடன் கொண்டாடினார்.
பெண்கள் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலத்தில் இதற்கான விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகையில், ''நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்கள் மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதை வரும் தலைமுறை விவாதிக்கும், கொண்டாடும். இந்த தருணத்தில் அனைத்து பெண்களையும் நான் வாழ்த்துகிறேன். ராஜ்ய சபாவிலும் இந்த மசோதா முழு வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் சுயமரியாதையும் இன்று விண்ணைத் தொடுகிறது. நாட்டின் அனைத்துப் பெண்களும் நமக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த மசோதாவை அமல்படுத்துவதில் ஏராளமான தடைகள் இருந்தன. நோக்கம் நல்லதாக இருந்த காரணத்தினால், அமல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், இந்த மசோதா நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். செப்டம்பர் 20-21 வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நாளாக அமைந்துள்ளது. இதை நிறைவேற்ற மக்கள் நமக்கு வாய்ப்பு அளித்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்றப் பயணத்தின் பொற்காலம்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
இந்த மசோதா நிறைவேற்றம் மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்கான அனைத்து செயல்களையும் செய்வதற்கான மைல்கல் ஆக அமைந்துள்ளது. பெண்கள் மசோதாவை சாதாரண சட்டமாக நினைத்துக் கொள்ள வேண்டாம். புதிய இந்தியாவின், புதிய ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பாக பார்க்கப்படுகிறது. இந்திய மக்கள் கொடுத்த வெற்றியால்தான் இன்று இந்த மசோதா நிறைவேறியுள்ளது. மோடியால் அல்ல. அரசு மெஜாரிட்டியாக இருந்த காரணத்தினால் எந்த சிக்கலும் எழவில்லை. 30 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் மக்கள் கொடுத்த அபரிமிதமான ஆதரவுதான்.
மோடி அரசின் வரலாற்று வெற்றி: நாரி சக்தி வந்தன் மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி
சில முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் திறன் பெற்றது. அந்த மாதிரியான முடிவாக இதைப் பார்க்கிறோம். இந்த சட்டத்தின் மூலம் நாட்டின் பெண்கள் ஜனநாயகத்தில் ஈடுபட வேண்டும் என்று கடந்த முப்பது ஆண்டுகளாக பாஜக முயற்சித்து வருகிறது. இது ஒரு அர்ப்பணிப்பு. இன்று நாங்கள் அதை நிறைவேற்றி இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் பெண்களின் அதிகாரத்தை பார்த்து இருக்கிறோம். அவையில் இந்த மசோதாவை கிழித்து எரிந்தவர்களும் தற்போது ஆதரித்து உள்ளனர். இதற்குக் காரணம் கடந்த பத்து ஆண்டுகளாக பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருக்கின்றனர்.
பெண்களுக்கு மீண்டும் நான் வாழ்த்து கூறுகிறேன். நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் இந்த மசோதாவை நிறைவேற அனைவரும் கடமை ஆற்ற வேண்டும்'' என்றார்.