Asianet News TamilAsianet News Tamil

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஒரு நாள் கலெக்டராக செயல்பட்ட மகாராஷ்டிரா பள்ளி மாணவி....

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிராவில் பள்ளி மாணவி ஒருவர் ஒரு நாள் கலெக்டராக பணிபுரிந்த சம்பவம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Women's Day 2020: Schoolgirl Becomes Collector For A Day In Maharashtra
Author
Chennai, First Published Mar 4, 2020, 7:27 PM IST

உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் சர்வதேச பெண்கள் தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஒரு வார காலத்துக்கு சிறந்த சில பள்ளி மாணவிகளுக்கு ஒரு நாள் கலெக்டராக பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

Women's Day 2020: Schoolgirl Becomes Collector For A Day In Maharashtra

அப்படியொரு பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நாள் கலெக்டராக செயல்பட்டு அசத்தி உள்ளார் புல்தானா மாவட்ட பள்ளிமாணவி ஒருவர். இது தொடர்பாக புல்தானா மாவட்ட கலெக்டர் சுமன் ரவாத் சந்திரா டிவிட்டரில் தொடர் பதிவுகளில், சர்வதேச பெண்கள் தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஒரு வார காலத்துக்கு சிறந்த சில பள்ளி மாணவிகளுக்கு ஒரு நாள் கலெக்டராக பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

Women's Day 2020: Schoolgirl Becomes Collector For A Day In Maharashtra

இன்றைய கலெக்டர் ஜில்லா பரிஷத் பள்ளியின் சிறந்த மாணவி பூனம் தேஷ்முக். பூனம் தேஷ்முக் இன்று (கடந்த திங்கட்கிழமை) கலெக்டராக தனது பணியை புத்திசாலித்தனமாக நடத்துகிறார். அவர் ஒருநாள் வெற்றி பெற நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும இருக்கிறார். அதற்காக கடினமாக உழைப்பதாகவும், மற்ற பெண்களை ஊக்குவிப்பதாகவும் உறுதிமொழி எடுத்தார் என தெரிவித்து உள்ளார். மேலும் மாணவி பூனம் படத்தையும் அதில் ஷேர் செய்து இருந்தார். கலெக்டரின் இந்த டிவிட்டுக்கு டிவிட்டரில் பலத்த வரவேற்பு காணப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios