ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்து கொண்டு போன் பேசிய சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்து கொண்டு போன் பேசிய சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அண்மைகாலங்களாக மக்கள் கைப்பேசிக்கு அடிமையாகியுள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைபேசிகளுக்குள் மூழ்கி உள்ளனர். கைப்பேசியில் பிறரிடம் பேசும் போது தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே மறந்துவிடுகின்றனர். சிலர் வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசிக்கொண்டே செல்வதால் வழி தவறி போவது, விபத்துக்களில் சிக்குவது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. மேலும் பலர் மொபைலில் சாட் செய்தும், வீடியோ கால் பேசிக்கொண்டும் சாலையில் நடந்து செல்லும் போது, கவனக்குறைவால் விபத்து நேரிடும் சூழல் ஏற்படுகிறது. அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக சமூக வலைதளங்களில் எப்போதும் ஒரு சில வித்தியாசமான வீடியோக்கள் வேகமாக வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த பெண் செய்த அசாதாரன செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுத்தொடர்பான வீடியோவில், ஒரு பெண் ரயில் தண்டவாளத்தில் படுத்து கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு ரயில் அவரது தலைக்கு மேல் கடந்து செல்கிறது. அந்த ரயில் சென்ற பிறகு அந்த பெண் எழுந்து மீண்டும் சர்வ சாதாரணமாக பேசிக்கொண்டே போகிறார்.
இது காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வீடியோவுடன், அவர் ஒரு வேடிக்கையான தலைப்பு கொடுத்துள்ளார். தொலைபேசியில் கிசுகிசுக்கள் மிகவும் முக்கியம் என அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து மக்கள் பல வகையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவில் உள்ள பெண் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பன உள்ளிட்ட அவரது விவரங்கள் ஏதும் தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
