சம்பல்புரி சேலை அணிந்து மாரத்தான் ஓடிய இந்திய பெண்.. சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுகள்
ஒடிசாவைச் சேர்ந்த பெண் சம்பல்புரி சேலை அணிந்து இங்கிலாந்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் உள்ள ஒடிசா பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டரில் சம்பல்புரி கைத்தறி புடவை அணிந்து 42.5 கிமீ மாரத்தான் ஓடினார். சிவப்பு நிற புடவை மற்றும் ஆரஞ்சு நிற ஸ்னீக்கர்களை அணிந்த 41 வயதான மதுஸ்மிதா ஜெனா தாஸ் 4 மணி நேரம் 50 நிமிடங்களில் மாரத்தானை முடித்தார். மதுஸ்மிதா ஜெனா தாஸ் மற்ற பங்கேற்பாளர்களுடன் மாரத்தானில் பங்கேற்பதைக் காட்டும் நிகழ்வின் புகைப்படங்களைப் பகிரபட்டுள்ளது.
அந்த ட்வீட்டில், ''இங்கிலாந்தின் மான்செஸ்டரில் பெண் ஒருவர் சம்பல்புரி சேலை அணிந்து ஓடினார். சம்பல்பூர், பல நூற்றாண்டுகளாக இணைந்து வாழும் பழங்குடியினர் மற்றும் நாட்டுப்புற சமூகங்களின் வலுவான இணைப்பிலிருந்து எழும் தனித்துவமான உள்ளடக்கிய கலாச்சார அடையாளத்தைக் கொண்டுள்ளது” என்று எழுதப்பட்டிருந்தது.
'Friends of India Soc Intl UK' இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, மராத்தானின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அந்த ட்வீட்டில், ''இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிக்கும் இந்தியரான மதுஸ்மிதா ஜெனா, அழகான சம்பல்புரி புடவையில் மான்செஸ்டர் மராத்தானில் ஓடுகிறார். அவர் தனது இந்திய பாரம்பரியத்தை பெருமையுடன் வெளிப்படுத்தும் அதே வேளையில், மிகச்சிறந்த இந்திய உடையில் அழைக்கும் கண்ணோட்டத்தையும் முன்வைக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், அவர் உலகம் முழுவதும் பல மராத்தான்கள் மற்றும் அல்ட்ரா மராத்தான்களை ஓடியுள்ளார். சேலையில் ஓடுவது எப்பொழுதும் கடினமான பணி என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர். இது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு முடிவுகள் எப்போது ரிலீஸ் தெரியுமா? முழு விபரம்
இதையும் படிங்க..400 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் நிங்குலூ ஹைபிரிட் சூரிய கிரகணம்.. எங்கு, எப்போது காணலாம் - முழு விபரம்