Asianet News TamilAsianet News Tamil

ஜார்க்கண்டில் பிரதமர் மோடியின் வாகனத்தை வழிமறித்து நிறுத்திய பெண்!

சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் பிரதமர் மோடியின் காரை வழிமறித்து நிறுத்தினார். பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்தப் பெண்ணை அப்புறப்படுத்தினர்.

Woman caught while attempting to breach PM Modi's security in Ranchi sgb
Author
First Published Nov 15, 2023, 10:02 PM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற பிரதமர் மோடியின் காரை ஒரு பெண் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, பகவான் மிர்ஸா முண்டா ஜெயந்தி விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் பிரதமர் மோடியின் காரை வழிமறித்து நிறுத்தினார்.

உடனடியாக பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பெண்ணை காரின் முன்பு இருந்து அகற்றினர். பிரதமர் மோடி பயணித்த வாகனத்தை பெண் ஒருவர் குறுக்கே வந்தது நிறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உ.பி.யில் டெல்லி-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய பயணிகள்!

அந்தப் பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடந்திவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், அவர் பிரதமர் மோடியை நீண்ட நாட்களாக நேரில் சந்திக்க விரும்பியதாகக் கூறியுள்ளார்.

"அந்தப் பெண் 10 நாட்கள் டெல்லியில் இருந்திருக்கிறார். ஆனால் அங்கு பல முயற்சிகள் செய்தும் அவரால் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. பின், பிரதமர் ராஞ்சி செல்வதாகக் கேள்விப்பட்டதும், பிரதமரை அங்கு சென்று சந்திக்க முயற்சி செய்துள்ளார்" என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

தடைசெய்யப்பட்ட 70% FDC மருந்துகள் இன்னும் விற்பனையில் உள்ளன: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

 
Follow Us:
Download App:
  • android
  • ios