Asianet News TamilAsianet News Tamil

உ.பி.யில் டெல்லி-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய பயணிகள்!

தீப்பற்றிய ரயில் பெட்டியில் அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்தனர் என்று கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

Massive fire erupts in New Delhi-Darbhanga Express train near Etawah
Author
First Published Nov 15, 2023, 7:29 PM IST | Last Updated Nov 15, 2023, 8:11 PM IST

உ.பி.யின் எட்டாவாவில் டெல்லி-தர்பங்கா அதிவிரைவு விரைவு ரயிலின் (02570) ஒரு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் சராய் பூபத் ஸ்டேஷன் வழியாகச் சென்றபோது, S1 ஸ்லீப்பர் கோச்சில் இருந்து புகை வருவதை அந்த ஸ்டேஷன் மாஸ்டர் கவனித்துள்ளார். உடனே அவர் மாஸ்டர், ஒரு பெட்டியில் இருந்து புகை வருவது குறித்து ரயிலின் லோகோ பைலட்டுக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.

Explained: ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பில் இந்தியா இடம்பெறாதது ஏன்?

தகவல் கிடைத்ததும் ரயில் உடனே நிறுத்தப்பட்டது. புகை வந்த ஸ்லீப்பர் கோச்சில் இருந்து பயணிகள் அலறி அடித்துக்கொண்டு தப்பி ஒடி வெளியேறினர். பயணிகள் அனைவரும் வெளியேறிய பின்னர் அந்த ரயில் தீப்பிடித்து எரிந்தது.

தீப்பற்றிய ரயில் பெட்டியில் அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்தனர் என்று கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்! 'க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்' ஆப்ஷனில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios